- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நானும் அதுக்காக மனமுடைஞ்சுட்டேன்.. அவர் உ.கோ ஜெயிக்க தகுதியானவர்.. விட்ராதீங்க.. வாழ்த்திய சோயப் அக்தர்

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை மாபெரும் ஃபைனலுக்கு இந்திய கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது செமி பைனலில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 172 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 57, சூரியகுமார் யாதவ் 47 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இங்கிலாந்து சுமாராக விளையாடி 103 ரன்கள் சுருண்டு தோல்வியை சந்தித்து வெளியேறியது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

வாழ்த்திய அக்தர்:
இந்நிலையில் இங்கிலாந்துக்கு அற்புதமான சுழலை எதிர்கொள்வது இயற்கையாகவே தெரியாது என்று சோயப் அக்தர் கூறியுள்ளார். மேலும் 2023 உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்ததை பார்த்து தாமும் மனமுடைந்ததாக தெரிவிக்கும் அவர் இம்முறை ரோஹித் சாம்பியன் பட்டத்தை பெறுவதற்கு தகுதியானவர் என்று பாராட்டியுள்ளார்.

எனவே இம்முறை இந்தியா வெற்றியை தவற விடக்கூடாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசுவது பின்வருமாறு. “இந்தியர்களால் சுழலை சமாளிக்க முடியும். ரோகித் சர்மா இங்கிலாந்தின் அடில் ரசித்தை சமாளித்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எப்படி சுழலை எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாது. இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகுந்தது கிடையாது”

- Advertisement -

“அங்கே இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் எடுத்து இந்தியாவை அழுத்தத்தில் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 2வது பேட்டிங் செய்வதாக அடம் பிடித்தனர். மறுபுறம் இந்தியா வெற்றிக்கு தகுதியானவர்கள். இந்த தொடரை அவர்கள் வெல்ல வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். கடந்த வருடம் வென்றிருக்க வேண்டிய உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் நானும் மனமடைந்தேன். ஏனெனில் அவர்கள்வெல்வதற்கு தகுதியானவர்கள்”

இதையும் படிங்க: பாபரை முந்திய ரோஹித் சர்மா புதிய உலக சாதனை.. தோனி கூட செய்யாத ஸ்பெஷல் ஹாட்ரிக் சாதனை

“தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தி கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரோகித் சர்மா சொல்லி வருகிறார். அதை வெல்வதற்கு அவர் தகுதியானவர். இந்நேரம் அவர் 2 உலகக் கோப்பையை கையில் வைத்திருக்க வேண்டும். இம்முறை அவர்கள் கோப்பையை விடக்கூடாது. மிகவும் பெரிய வீரராகவும் சுயநலமற்ற கேப்டனாக தன்னுடைய அணிக்காக விளையாடும் அவர் தனது கேரியரை உச்சமாக முடிக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -