ரோஹித் சர்மாவை பாத்து கத்துக்கோங்க பாபர் அசாமை மறைமுகமாக கடிந்த ஷாஹித் அப்ரிடி – விவரம் இதோ

Afridi
- Advertisement -

நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே கடந்த 2007-ஆம் ஆண்டு டி20 கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியானது தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ள வேளையில் இந்திய அணிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அதோடு இந்திய அணியை ஒப்பிட்டு மற்ற அணிகள் குறித்தும் சில வீரர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாஹித் அப்ரிடி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை பாராட்டி சில கருத்துக்களை பகிர்ந்து அதன் மூலம் மறைமுகமாக பாபர் அசாமை விமர்சனம் செய்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு அணியின் தலைவன் என்ன செய்கிறான் என்பது மிகவும் முக்கியம். அந்த தலைவனின் வழியில் தான் அந்த அணியும் பயணிக்கும். அந்த வகையில் ரோகித் சர்மா இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தினார்.

ஆரம்பத்தில் அவர் அதிரடியாக விளையாடுவதை பார்க்கும் வீரர்கள் அவர்கள் களத்திற்கு வரும்போதும் அதிரடியாக விளையாடுகின்றனர். இந்த டி20 உலககோப்பை தொடர் முழுவதுமே ரோஹித் சர்மா ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த ஆட்டத்தின் மூலம் மற்ற வீரர்களும் தன்னம்பிக்கை பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

எப்பொழுதுமே ஒரு அணியின் கேப்டனின் செயல்பாடு என்பது மிக முக்கியம் என்று கருதுபவன் நான். ஏனெனில் கேப்டனின் வழியில் தான் அந்த அணியும் பயணிக்கும். அந்த வகையில் ரோகித் சர்மாவில் கேப்டன்சி மற்றும் ஆட்டம் என இரண்டுமே சிறப்பாக இருந்தது அவரது தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றதும் சரியான ஒன்றுதான் என அப்ரிடி கூறியுள்ளார்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பையை வென்ற இந்திய வீரர்கள் நாடு திரும்பிய பின்னர் நடக்கவுள்ள நிகழ்ச்சி – பிரதமர் செய்துள்ள ஏற்பாடு

இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒரு நல்ல தலைவனாக நடந்து கொள்ளவில்லை என்றும் அவரது பேட்டிங் மந்தமாக இருந்ததாலேயே மற்ற வீரர்களும் மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ஷாஹித் அப்ரிடி.

Advertisement