ஆர்.சி.பி அணியிலிருந்து வெளியேறிய உடனே சதம் அடித்து அசத்திய இந்திய இளம்வீரர் – நல்ல காலம் பொறந்தாச்சு

Shahbaz-Ahmed
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் இந்த ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஒன்று. பல்வேறு நட்சத்திர வீரர்கள் இருந்தும் அந்த அணி சாம்பியன் பட்டத்தை தவற விட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமான ஒரு விடயமாகவே அமைந்து வருகிறது.

குறிப்பாக விராட் கோலியின் தலைமையில் பல அதிரடி வீரர்கள் ஒன்றாக இருந்தும் அந்த அணியால் கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனது. அதன்பிறகு கடந்த இரு சீசன்களாக டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. எப்படியாவது ஒரு ஐபிஎல் கோப்பையையாவது வென்று விட வேண்டும் என்று விராட் கோலியும் விடாப்பிடியாக ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஆர்.சி.பி அணி பலமான அணியாக இருந்தும் இதுவரை கோப்பையை கைப்பற்றாமல் இருக்கும் அணி என்பதனால் ரசிகர்கள் மத்தியில் பொதுவாகவே ஆர்சிபி அணி ஒரு அதிர்ஷ்டம் இல்லாத அணியாக பார்க்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்த அணிக்கு உள்ள ரசிகர்களின் எண்ணிக்கை என்பது அசாத்தியமான ஒன்று. அந்த அளவிற்கு ரசிகர்கள் பெங்களூர் அணியை ஆதரித்து வருகின்றனர்.

அதேபோன்று நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு வீரர் ஆர்.சி.பி அணிக்குள் நுழைந்துவிட்டால் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் என்றும், ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேறும் வீரர்கள் பிரகாசிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற ஒரு பேச்சும் இருந்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக டிரேடிங் முறையில் சில வீரர்கள் மாற்றப்பட்டிருந்த வேளையில் பெங்களூரு அணியில் விளையாடி வந்த ஆல்ரவுண்டர் சபாஷ் அகமது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக டிரேட் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : பழைய கனவு காணாதீங்க.. அவங்க 3 பேர் உங்கள தெறிக்க விட்ருவாங்க.. மைக்கேல் வாகன் எச்சரிக்கை

இப்படி ஆர்சிபி அணியில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் தற்போது விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் வேளையில் காலிறுதி போட்டியின் போது சதம் அடித்து அசத்தியுள்ளார். இப்படி ஆர்சிபி அணியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியிலேயே அபாரமாக விளையாடி சதம் அடித்த சபாஷ் அகமதுவிற்கு பிரகாசமான கிரிக்கெட் கரியர் எதிர்வர காத்திருக்கிறது என்று அவரை பாராட்டியும், ஆர்.சி.பி அணியை கிண்டல் செய்தும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement