எங்கிருந்து ஆரம்பித்தோம் என்று மறந்துவிடாதீர்கள். கிரிக்கெட் வீரர்கள் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – சேவாக் ஆதங்கம்

virender sehwag
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக். டெல்லியை சேர்ந்த வீரரான சேவாக் நேற்று மும்பையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மும்பைக்கு வந்து அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

sehwag

- Advertisement -

அப்போது அவர் கிரிக்கெட் வீரர்கள் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது : மற்ற விளையாட்டு துறையை சேர்ந்த வீரர்கள் அனைவரும் அவர்களை உருவாக்கிய பயிற்சியாளர்களை விட்டுக்கொடுக்காமல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் கிரிக்கெட் வீரர்கள் அது போன்று நடந்து கொள்வதில்லை.

கிரிக்கெட் வீரர்கள் நாட்டிற்காக விளையாட தொடங்கிய பிறகு அவர்களை சிறுவயதில் மற்றும் அவர்கள் வளரும் காலத்தில் அவர்களைப் பயிற்றுவித்த பயிற்சியாளர்களை மறந்துவிடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் அந்த பயிற்சியாளர்களிடம் அதிகளவில் பேசுவதில்லை, சந்திப்பதில்லை ஆனால் மற்ற வீரர்கள் பெரிய வீரர்களாக மாறிய பின்னரும் அவ்வப்போது அந்த ஆரம்பகால பயிற்சியாளர்களை சந்தித்து அவர்களது ஆலோசனைகளை கேட்கிறார்கள்.

sehwag-sachin

எனவே இனிவரும் காலத்தில் கிரிக்கெட் வீரர்களும் தங்களது துவக்க கால பயிற்சியாளர்களை மறக்காமல் அவர்களிடம் ஆலோசனை பெறுங்கள். ஏனெனில் நீங்கள் வளரும் போது உங்களுடைய திறன்களை அவர்கள்தான் முதலில் கண்டறிந்து இருப்பார்கள். எனவே ஆரம்ப கால பயிற்சியாளர் கொடுக்கும் ஆலோசனைகள் உங்கள் திறனை மேம்படுத்தும், உங்கள் ஆட்டத்தின் போக்கை மேம்படுத்த உதவும் என்று சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement