மீண்டும் வங்கதேச அணியை சீண்டி தனது கருத்தினை தெரிவித்த சேவாக்.. என்ன இதெல்லாம் ? விவரம் இதோ

Sehwag
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஐசிசி நடத்தும் தொடர்களில் இறுதிவரை சென்று கோப்பையை கைப்பற்ற முடியாமல் தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையை கைப்பற்றி அந்த தோல்விகளுக்கெல்லாம் பதிலடி கொடுத்து சாம்பியனாக வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

அந்த வகையில் தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்று போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணி அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய காத்திருக்கிறது. எதிர்வரும் போட்டியில் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றால் கூட இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.

இவ்வேளையில் இந்திய அணி குறித்தும் இந்திய அணி பெறும் வெற்றி குறித்தும் பல்வேறு வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வங்கதேச அணியை வம்பிற்கு இழுக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் பேசியுள்ள ஒரு கருத்து தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் சேவாக் கூறியதாவது : பங்களாதேஷ் அணி மட்டும் முதலில் பேட்டிங் செய்திருந்தால் அவர்கள் மிகவும் குறைவான ஸ்கோரையே அடித்திருப்பார்கள். இந்திய அணி அதனை வெகு விரைவாக எட்டிப்பிடித்து வெற்றி பெற்றிருக்கும். அனைவரும் விரைவாக வீட்டிற்கு சென்றிருப்போம். இது வெறும் பங்களாதேஷ் அணிதான் அவர்களுக்கு ஏன் தேவையில்லாத பில்டப்பை அனைவரும் தருகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை என வங்கதேச அணியை அவர் குறைத்து பேசி உள்ளார்.

இதையும் படிங்க : 2வது ஓவர்லயே முடிச்சுட்டாரு.. இளம் வீரர்கள் ரோஹித் வார்த்தையை ஃபாலோ பண்ணனும்.. ஆரோன் பின்ச் பராட்டு

ஏற்கனவே ஷாகிப் அல் ஹசனை டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கூறியிருந்த சேவாக் அந்த கருத்திற்காக சற்று விமர்சனத்தை சந்தித்திருந்த வேளையில் தற்போது ஒட்டுமொத்த வங்கதேச அணியையும் சிறிய அணி என்பது போன்று விமர்சித்து பேசி உள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement