சேவாக்கை தேடிவந்த 93 வயதான ரசிகர்…இவர் செய்த செயல், என்ன தெரியுமா ? – புகைப்படம் உள்ளே

patiala

சேவாக்கை காண்பதற்காகவே பாட்டியாலாவிலிருந்து கிளம்பி சண்டிகர் வரைக்கும் பயணம் செய்து வந்துள்ளார் 93வயதான ஓம்பிரகாஷ்.பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான போட்டி கண்டிகரில் நடைபெற்றது.

shewag

இந்தப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களில் 197 ரன்களை குவித்து சென்னை அணியை 5ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

- Advertisement -

போட்டி முடிந்தவுடன் சேவாக்கை காண நெடுந்தொலை விலிருந்து ஓம்பிரகாஷ் என்பவர் வந்திருந்ததை அறிந்துகொண்ட அவர், ஓம் பிரகாஷை சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

- Advertisement -

பின்னர் அதனை சமூகவலைத்தளத்தில் பதிந்து “93 வயதுடைய ஓம்பிரகாஷ் என்னை காண்பதற்காக பாட்டியாலாவிலிருந்து சண்டிகர் வரையிலும் வந்திருந்தது என்னை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அவர் என் மீது காட்டிய அன்பிற்கும், அக்கறைக்கும் மிகுந்த மகிழ்ச்சி” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அந்த டிவிட்டரை சேவாக் ரசிகர்கள் பலரும் ரீ டிவீட் செய்து வருகின்றனர். பலரும் தங்களது வாழ்த்துகளையும் சேவாக்கின் டிவீட்டில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement