- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சின், தோனி, கோலி வரிசையில் வந்துடீங்க. நடராஜனை பாராட்டிய சதிஷ் – வைரலாகும் புகைப்படம்

தங்கராசு நடராஜன் ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பிடித்தவர். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் நவ்தீப் சைனிக்கு பதிலாக இந்திய அணியில் முதன்முதலில் அறிமுகமாகினார். இவர் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதன் பிறகு நடைபெற்ற டி20 தொடரிலும் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக நடராஜன் பங்கு பெற்று விளையாடி வந்தார்.

டி20 தொடரிலும் சிறப்பாக பந்துவீசி பல்வேறு முக்கிய விக்கெட்களை பெற்று கொடுத்து இந்திய அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தார். மொத்தம் நான்கு சர்வதேச போட்டியில் பங்கு பெற்ற நடராஜன் 8 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நடராஜன் டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

முதல் மூன்று போட்டிகளில் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடராஜன் மூன்று டெஸ்ட் போட்டியிலும் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு மாபெரும் ஏமாற்றமாக இருந்தது. இதையடுத்த கடந்த 15ம் தேதி தொடங்கிய நடராஜன் மூத்த வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம்பிடித்தார். ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் பங்குபெற்ற நடராஜன் மீண்டு 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

நடராஜன் 4வது டெஸ்டின் முதல் இன்னிஸ்சில் 24.2 ஓவர்கள் வீசி 78 ரன்கள் விட்டு கொடுத்துள்ளார். இதன்பின் இரண்டாவது இன்னிஸ்சில் 14 ஓவர்கள் வீசி 41 ரன்கள் விட்டு கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. இருந்தாலும் நடராஜனின் இந்த டெஸ்ட் பங்களிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், நடராஜனின் ரசிகரான திரைப்பட நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளங்களில் நடராஜனை பாராட்டி உள்ளார்.

சதீஷ் தனது இன்ஸ்டாகிராமில் கல்லூரி விடுதி சுவற்றில் தோனி, சச்சின் போன்ற வீரர்களின் புகைப்படம் இருந்தது. ஆனால் தற்போது நடரானின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. நடராஜனின் இந்த வளர்ச்சி பெருமையாக இருக்கு என்று தனது புதிய படத்தில் வரும் ஒரு காட்சியை பதிவிட்டு ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இவரது இந்த ட்விட் வைரலாகி வருகிறது.

- Advertisement -
Published by