இரண்டாவது பாதியில் எல்லாமே மாறிடுச்சு.. இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த – சஞ்சு சாம்சன் வருத்தம்

Samson
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வந்த ராஜஸ்தான் அணி இறுதி போட்டிக்கு செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த தோல்வி அவர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவிக்கவே 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அந்த இலக்கினை எதிர்த்து விளையாடிய ராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்களின் முடிவில் அவர்களால் 7 விக்கெட்டுகளை இழந்து 139 மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக 36 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் துருவ் ஜுரேல் 35 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 56 ரன்கள் குவித்து கடைசி வரை போராடினார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : இது ஒரு பெரிய போட்டி. இந்த போட்டியில் நாங்கள் முதலில் பந்து வீசிய விதத்தை நினைத்து உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக துவக்க ஓவர்களில் அதிகளவு ரன்கள் சென்றவுடன் மிடில் ஓவர்களின் போது பந்துவீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தை எங்கள் கைக்குள் கொண்டு வந்தனர். ஆனால் இரண்டாவது பாதியில் மைதானத்தின் தன்மை முற்றிலுமாக மாறியதாக தெரிகிறது. பந்து நின்று திரும்பியதால் பேட்டிங் செய்ய சிரமமாக இருந்தது. அதோடு மைதானத்தின் தன்மை முற்றிலும் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது.

இதையும் படிங்க : இந்த தொடர் ஆரம்பிக்கும் போதே முடிவு பண்ணிட்டு தான் வந்தோம்.. இறுதிப்போட்டிக்கு சென்றது குறித்து – கம்மின்ஸ் மகிழ்ச்சி

அதன் காரணமாகவே சன் ரைசர்ஸ் அணி சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து எங்களை தடுத்து நிறுத்தி விட்டனர். இந்த தொடரில் நாங்கள் சில புதிய திறமைகளை கண்டறிந்துள்ளோம். அந்த வகையில் ரியான் பராக், துருவ் ஜுரேல் ஆகியோர் எங்களது அணிக்காக இந்த சீசன் முழுவதுமே மிகச் சிறப்பாக விளையாடியுள்ளனர். இந்த தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கும் விடயம் என்றாலும் இறுதிவரை நாங்கள் போராடியதாகவே நினைக்கிறேன் என சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement