உலகக்கோப்பை அணிக்கு சாஹல் செட் ஆக மாட்டாரு. அவருக்கு பதிலாக இவரை சேருங்க – மஞ்சரேக்கர் கருத்து

Chahal
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது மும்முரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியும் அடுத்தடுத்து டி20 தொடர்களில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர்ச்சியான தொடர்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு உலகக்கோப்பை அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது பல வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு தற்போது தங்களது சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

IND vs RSA Chahal Axar Patel

அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியில் இழந்த இடத்தை மீண்டும் தற்போது கெட்டியாக பிடித்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். இதனால் அவர் நிச்சயம் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடருக்கு யுஸ்வேந்திர சாஹலை தேர்வு செய்ய வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நாம் உலக கோப்பை அணிக்கான தேர்வினை பழைய ரெக்கார்டுகளை வைத்து செய்யக்கூடாது. அதேபோன்று சிறப்பான பார்மில் இருக்கும் வீரர்களை தான் செய்ய வேண்டும்.

Kuldeep-1

ஏனெனில் பழைய போட்டிகளை வைத்து நாம் பார்த்தாலும் ஆஸ்திரேலிய மைதானங்களில் சாஹலின் பார்ம் மோசமாகவே இருந்துள்ளது. அதோடு அங்கு அவர் அந்த அளவிற்கு மிகச் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தவில்லை. ஆனால் குல்தீப் யாதவ் ஆஸ்திரேலிய மைதானங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரிலும் பிரமாதமாக செயல்பட்ட அவர் ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மிகச்சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்.

- Advertisement -

அவரது பந்து வீச்சு பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் சிரமத்தை அளிக்கும். எனவே சாஹலை காட்டிலும் குல்தீப் யாதவ்வை அணியில் எடுத்தால் அது இந்திய அணிக்கு உதவும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சாஹலின் மிகப்பெரிய பலமே அவருடைய தைரியம் தான். அவரது பந்துகளில் பவுண்டரிகள் சென்றாலும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எந்த ஒரு பயமும் இல்லாமல் பந்து வீசுவார்.

இதையும் படிங்க : நீங்க சொன்னதை சாதிச்சிடீங்க. தமிழக வீரர் தினேஷ் கார்த்திகை பாராட்டி தள்ளிய – ஹார்திக் பாண்டியா

ஆனாலும் குல்தீப் யாதவ் ஆஸ்திரேலிய மைதானங்களில் சிறப்பாக செயல்படுவார் என்பதே என்னுடைய எண்ணம். ஒருவேளை ஆஸ்திரேலிய மைதானத்தில் பந்து டர்ன் ஆனால் அணியில் சாஹலை சேர்க்கலாம். அப்படி இல்லை என்றால் குல்தீப் யாதவ் தான் சிறந்த தேர்வாக இருப்பார் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement