- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரிஷப் பண்ட்டுக்கு இதெல்லாம் வேலையாகாது.. விராட் கோலிக்கு மட்டுமே அந்த தகுதியிருக்கு.. சஞ்சய் மஞ்ரேக்கர் பேட்டி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய 3வது சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இதுவரை ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா கிட்டத்தட்ட செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. முன்னதாக வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற 2வது சூப்பர் 8 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் முக்கிய நேரத்தில் தேவையின்றி ரிவர் ஸ்வீப் அடித்து அவுட்டானார். குறிப்பாக பவுண்டரி அடிக்கும் அளவுக்கு நிறைய இடைவெளி இருந்தும் அவர் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து கேட்ச் கொடுத்து அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதை பெவிலியினில் இருந்து பார்த்த விராட் கோலி தனது முகத்தை துண்டால் வைத்து மூடிக்கொண்டு இப்படியா அவுட்டாவாய்? என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார்.

- Advertisement -

தகுதியான விராட் கோலி:
அதைத் தொடர்ந்து பெவிலியன் வந்ததும் “அடிப்பதற்கு அவ்வளவு இடம் இருந்தும் ஏன் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தாய்?” என்ற வகையில் பேசிய விராட் கோலி அவருக்கு ஆலோசனையும் வழங்கினார். இந்நிலையில் பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட ரிஷப் பண்ட் ஆக்ரோசமாக ரிவர்ஸ் ஷாட்டுகளை இயற்கையாக அடிக்கக் கூடியவர் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

அவருக்கு இது போன்ற அறிவுரைகள் வழங்குவது வேலையாகாது என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இருப்பினும் ரிஷப் பண்ட்டுக்கு அது போன்ற ஆலோசனையை கொடுக்கும் தகுதி விராட் கோலிக்கு மட்டுமே இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் அவுட்டான போது விராட் கோலியின் ரியாக்சனை நீங்கள் பாருங்கள்”

- Advertisement -

“அவர் கேமரா தன்னை பார்க்கிறது என்று அறியவில்லை. அதை அறிந்ததும் உடனடியாக துண்டை வைத்து அவர் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டார். அவரைப் போலவே ரிஷப் பண்ட் அவுட்டை பார்த்து ரசிகர்களும் முகத்தை மூடியிருப்பார்கள். ஏனெனில் அந்த ஷாட்டை புறக்கணித்து நேராக விளையாடுவதற்கு இந்த பையனிடம் நிறைய நல்ல ஷாட்டுகள் இருக்கிறது”

இதையும் படிங்க: ஒரே ஓவரில் 6, 6, 6, 6, 6.. சோலார் பேனலை உடைத்து அமெரிக்காவை ஓடவிட்ட பட்லர்.. இங்கிலாந்து செமி ஃபைனல்

“இருப்பினும் ரிஷப் பண்ட் போன்ற வீரரிடம் பொறுமையாக இருந்து விளையாடுங்கள் என்று சொல்வது சிறந்ததல்ல. ஆனால் விராட் கோலி வேண்டுமானால் அவரிடம் சொல்ல முயற்சிக்கலாம்” என்று கூறினார். அவர் கூறுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே ஜேம்ஸ் ஆண்டர்சன், பட் கமின்ஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்கூப் அடித்த ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் ஸ்பின்னருக்கு எதிராக அடிப்பதில் ஆச்சரியமில்லை என்றே சொல்லலாம்.

- Advertisement -