IND vs AUS : அவர்கிட்ட தடவுனா உங்கள அவுட்டாக்கிடுவாரு, அதிரடியாக ஆடுங்க – விராட் கோலிக்கு சஞ்சய் பங்கர் ஆலோசனை

Bangar
- Advertisement -

வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நாக்பூரில் துவங்கும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை உலக அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஏனெனில் வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறப்போகும் அணிகளை தீர்மானிக்கும் இத்தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலியா பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்டதால் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்கும் எண்ணத்துடன் களமிறங்குகிறது.

AUs vs IND

- Advertisement -

மறுபுறம் 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இத்தொடரில் குறைந்தபட்சம் 3 வெற்றிகளை பெற்றால் மட்டுமே ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் விளையாடுகிறது. அத்துடன் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்த உலகின் டாப் 2 அணிகளும் மோதும் இத்தொடரில் அனல் பறக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இந்த கிரிக்கெட் தொடரில் ஸ்மித் – அஸ்வின், புஜாரா – ஹேசல்வுட் போன்ற வீரர்களின் மோதல் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்திய பேட்டிங் துறை முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலிக்கு நேதன் லயன் பெரிய சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் ஆடம் ஜாம்பா, மொயின் அலி, மிட்சேல் சாட்னர் போன்ற ஸ்பின்னர்களிடம் சமீப காலங்களில் விராட் கோலி அதிகமாகவே தடுமாறியுள்ளார்.

lyon 1

தடவாமல் அடிங்க:
குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து பார்முக்கு திரும்பி அவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்து பார்முக்கு திரும்பவில்லை என்பதுடன் கடைசியாக வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் மெஹதி ஹசன் போன்ற கத்துக்குட்டி ஸ்பின்னர்களிடம் பெட்டிப்பாம்பாக அடங்கினார். மேலும் நேதன் லயனிடம் வரலாற்றில் பலமுறை சிக்கியுள்ள விராட் கோலி 2014 அடிலெய்ட் போட்டியில் 2 இன்னிங்ஸில் சதமடித்து போராடிய போதும் அவரது சுழலில் சிக்கி அவுட்டானத்தை மறக்கவே முடியாது.

- Advertisement -

இந்நிலையில் பயந்து கொண்டு க்ரீஸ் விட்டு வெளியே வந்து அடிக்க தயங்குவதும் தடுப்பாட்டத்தை விளையாட நினைப்பதுமே நேதன் லயானுக்கு எதிராக விராட் கோலி தடுமாற காரணம் என்று முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். எனவே தயக்கத்தை விட்டு தடவாமல் சற்று அதிரடியாக விளையாடினால் தான் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி 2 விஷயங்களை எப்போதும் செய்வதில்லை. அதனால் தான் அவர் நேதன் லயனுக்கு எதிராக தடுமாற்றத்தை சந்திக்கிறார்”

Bangar

“ஒன்று அவருக்கு எதிராக கிரீஸ் விட்டு வெளியே வந்து விளையாடுவதற்கு விராட் கோலி தயங்குகிறார். மற்றொன்று அவருக்கு எதிராக விராட் கோலி ஸ்வீப் ஷாட்களை சுத்தமாக அடிப்பது கிடையாது. இப்படி இருந்தால் அவருக்கு எதிராக எப்படி உங்களால் ரன்கள் அடிக்க முடியும்? எனவே இம்முறை அவர் தன்னுடைய அணுகுமுறையை சற்று மாற்றியாக வேண்டும். இருப்பினும் இந்த சீசனில் விராட் கோலி சற்று கால்களை பயன்படுத்தி விளையாடுவதை பார்க்க முடிகிறது. ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமே அதை செய்யும் அவர் இம்முறை டெஸ்ட் போட்டிகளிலும் செய்ய வேண்டும்”

இதையும் படிங்க:வீடியோ : காப்பி அடிச்சாலும் நியாயம் வேணாமா? 360 டிகிரி பட்டத்துடன் பயிற்சி – பாபர் அசாமை கலாய்க்கும் ஸ்கை ரசிகர்கள்

“மேலும் அவர் ஆஃப் ஸ்டம்ப் கார்ட்டுக்கு சற்று வெளியே நகர்ந்து வர வேண்டும். அப்போது தான் அவரால் தன்னுடைய லைனை கவர் செய்து நேதன் லயனிடம் அதிக பந்துகளை எதிர்கொள்வதை தவிர்க்க முடியும். எனவே இம்முறை விராட் கோலி சற்று அதிரடியான அணுகு முறையை பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் தான் அவருக்கு உங்களால் சற்று அச்சுறுத்தலை கொடுக்க முடியும்” என்று கூறினார். இல்லையேல் இம்முறையும் நேதன் லயன் தான் விராட் கோலியை சாய்ப்பார் என்றும் சஞ்சய் பங்கர் எச்சரித்துள்ளார்.

Advertisement