ஐ.பி.எல் வரலாற்றில் முதல் வீரர்..! மைக்கேல் கிளார்க்கிடம் பயிற்சி .! ஷேன் வார்னே..! சந்தீப்

Sandeep
- Advertisement -

ஐ.பி.எல் போட்டியின் 45 வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதிய இந்த போட்டியில் இதுவரை நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரிலேயே நடைபெறாதா ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நேபாளத்தை சேர்ந்த ஒரு இளம் கிரிக்கெட் வீரரால் இந்த பெருமை ஐ.பி.எல் தொடருக்கு கிடைத்துள்ளது .

Lamichhane

- Advertisement -

இந்த ஐ.பி.எல் தொடரில் பல்வேறு அணிகளில் பல்வேறு இளம் வீரர்கள் பங்குபெற்றுள்ளனர். ஆனால் நேற்று நடந்த பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில், டெல்லி அணியில் புதிதாக களமிறங்கினார் நேபாளத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனே.

நேபாளத்தை சேர்ந்த இந்த இளம் வீரர் நேபாளத்தில் பல உள்நாட்டு போட்டிகளில் விளையடியுள்ளார். ஆல் ரௌண்டரான இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள மைக்கேல் கிளார்க் நடத்தி வரும் கிரிக்கெட் கிளப்பிலும் விளையாடியுள்ளார். இவரது ஆட்டத்தை கண்டு மைக்கேல் கிளார்க் மிகவும் பாராட்டி உள்ளார்.

Sandeep Lamichhane

மைக்கேல் கிளார்க்கின் பாராட்டுதலுக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தின் போது டெல்லி அணியால் 20 லட்ச ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார். நேற்று நடைபெற்ற போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் களமிறங்கிய இவர் 4 ஓவர்களை 25 ரன்களை கொடுத்தார். மேலும் தனது முதல் ஐபிஎல் போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் இந்த நேபாள வீரர்.

sandip

தான் சிறுவயது முதலே ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னேவின் பந்து வீச்சை டிவியில் பார்த்து தான் எப்படி சூழல் பந்தை வீச வேண்டும் என்று கற்றுக் கொண்டேன் என்றும், அவரை பார்த்து தான் கூக்லி பந்துகள் என்றால் எப்படி வீச வேண்டும் என்று தான் அறிந்து கொண்டதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு இந்திய வீரர் சச்சின் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement