இந்திய அணியில் ஒரு மாற்றம். இந்த போட்டியில் இவர் விளையாடமாட்டார். கோலி போட்ட புதிய கணக்கு – விவரம் இதோ

Rahul-2

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடர் தற்ளை அபாரமாக சேஸிங் செய்து வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.

IndvsNz

இந்நிலையில் இந்திய அணியில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் போட்டியில் விளையாடிய அதே அணி இந்திய அணி இந்த போட்டியிலும் போட்டியிலும் தொடரும் ஆனால் அணியில் ஒரு சிறிய மாற்றமாக கடந்த போட்டியில் மூன்று ஓவர்களில் 40 ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்த ஷர்துல் தாகூருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அணியில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் தாகூர் சற்று பேட்டிங் தெரிந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அணியில் இடம் பிடித்து இருந்தார். ஆனால் முதல் போட்டியில் அவர் ஏராளமான ரன்களை விட்டுக் கொடுத்ததால் இந்த போட்டியில் தாகூருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்றும் மேலும் ராகுல் தற்போது கீப்பிங் செய்து வருவதால் அணியில் ஏற்கனவே எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் கோலி.

அதுமட்டுமின்றி ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா போன்ற ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் 3 வேகப்பந்து வீச்சாளர்களையும் சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தாகூர் நீக்கப்பட்டு அவரது இடத்தில் நவதீப் சைனி இன்று களமிறக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த போட்டி இன்று மதியம் 12.20 மணியளவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -