CSK vs GT : மாபெரும் ஃபைனலில் சென்னையை பிரித்து மேய்ந்த தமிழகத்தின் இளம் சிங்கம் – சிஎஸ்கே தோல்வி உறுதியா?

- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற லீக் மற்றும் நாக் அவுட் சுற்றின் முடிவில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டி மே 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது. இருப்பினும் மழையால் மொத்தமாக ரத்து செய்யப்பட்டு வரலாற்றில் முதல் முறையாக ரிசர்வ் நாளான இன்று மீண்டும் நடைபெற்ற அந்தப் போட்டியில் வானிலையை கருத்தில் கொண்டு டாஸ் வென்ற சென்னை கேப்டன் எம்எஸ் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு உச்சகட்ட பார்மில் இருக்கும் சுப்மன் கில் எதிர்பார்த்தது போலவே பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு விரைவாக ரன்களை சேர்த்தார். குறிப்பாக தீபக் சஹார் விட்ட கேட்சை பயன்படுத்தி சென்னை பவுலர்களை பந்தாடிய அவர் 7 ஓவர்களில் சஹாவுடன் இணைந்து 67 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போது ஜடேஜாவின் சுழலில் தோனியின் வேகமான ஸ்டம்ப்ங்கில் 7 பவுண்டரியுடன் 39 (20) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய இளம் தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் கைகோர்த்த ரித்திமான் சஹா தனது பங்கிற்கு அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதமடித்தார்.

- Advertisement -

வெளுத்த சுதர்சன்:
தொடர்ந்து அசத்திய அவர் 2வது விக்கெட்டுக்கு 14 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரி 1 சிக்சருடன் 54 (39) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் ஆரம்பத்தில் தடுமாற்றமாக செயல்பட்ட சுதர்சன் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று கிளாஸ் நிறைந்த அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதமடித்தார். அந்த நிலைமையில் வந்த கேப்டன் பாண்டியா தாமதிக்காமல் அதிரடியாக பேட்டிங் செய்து ரன்களை சேர்த்து நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சாய் சுதர்சன் துஷார் தேஷ்பாண்டே வீசிய 17வது ஓவரில் 6, 4, 4, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்க விட்டு மிரட்டினார்.

தொடர்ந்து அதே வேகத்தில் மிரட்டலாக பேட்டிங் செய்து சதத்தை நெருங்கிய அவர் பதிரனா வீசிய கடைசி ஓவரில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டதால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக 3வது பந்தில் 8 பவுண்டரி 6 சிக்சருடன் 96 (47) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றது தமிழக ரசிகர்களை சோகமடைந்தது. இறுதியில் மறுபுறம் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸருடன் 21* (12) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் குஜராத் 214/4 ரன்கள் எடுக்க சுமாராக செயல்பட்ட சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

இந்த சீசனில் ஆரம்பம் முதலே அகமதாபாத் மைதானம் பேட்டிங்கு சாதகமாக இருந்து வரும் நிலையில் மழை வரும் என்று தவறாக கணித்த தோனி மாபெரும் ஃபைனலில் முதலில் பந்து வீச தீர்மானித்தார். ஆனால் அதற்கேற்றார் போல் செயல்படாமல் ரன் மெசினாக மாறிய சென்னை பவுலர்களை அடித்து நொறுக்கிய குஜராத் வெற்றி பெறும் அளவுக்கு பெரிய ரன்களை எடுத்துள்ளது. குறிப்பாக கில் ஏமாற்றத்தை கொடுத்தாலும் ஆரம்பத்தில் அம்பியாக மெதுவாக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் நேரம் செல்ல செல்ல தமிழக அநியாயமான சென்னை அடித்து நொறுக்கி கிட்டத்தட்ட தோல்வியை பரிசளிக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது பேட்டிங்கை ஜாம்பவான் சச்சின் வீடியோ பதிவிட்டு ட்விட்டரில் பாராட்டியுள்ளார். மேலும் பொதுவாகவே ஃபைனல்களில் பெரிய இலக்கை சேசிங் செய்வது மிகவும் சவாலானது என்ற சூழ்நிலையில் மோகித் சர்மா, ஷமி, ரசித் கான் போன்ற தரமான பவுலர்களைக் கொண்ட குஜராத்துக்கு எதிராக இந்த இலக்கை சென்னை எட்டிப் பிடித்து வெற்றி பெறும் என்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement