- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜிம்பாப்வே தொடரில் சாய் சுதர்சனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. 3 வீரர்களை சேர்த்த பிசிசிஐ.. வாய்ப்பு கிடைத்தது எப்படி?

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதில் விளையாடுவதற்காக ஏற்கனவே சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக ஜிம்பாப்வே கொஞ்சம் கத்துக்குட்டியாக கருதப்படுவதால் அந்த அணிக்கு எதிரான தொடரில் எப்போதுமே சீனியர்களுக்கு ஓய்வு கொடுப்பது வழக்கமாகும். அந்த வரிசையில் இம்முறையும் ஓய்வு பெற்ற விராட் கோலி, ரோஹித் சர்மாவை தாண்டி ஹர்திக் பாண்டியா, சூரியகுமார், பும்ரா ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனவே கில் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் அசத்திய அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்கள் ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

- Advertisement -

3 வீரர்கள் சேர்ப்பு:
இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதாவது ஜிம்பாப்வே தொடருக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சிவம் துபே, சஞ்சய் சாம்சன், யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பிடித்தனர். ஆனால் 2024 டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம் பிடித்திருந்த அவர்கள் இன்னும் இந்தியா வரவில்லை.

குறிப்பாக பார்படாஸ் நகரில் புயல் மழை ஏற்பட்டதால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. மறுபுறம் சுப்மன் கில் தலைமையிலான அணி ஏற்கனவே ஜிம்பாப்பேவுக்கு புறப்பட்டு சென்று விட்டது. அதனால் அந்த 3 வீரர்களும் திட்டமிட்டது போல் இந்தியாவுக்கு வந்து ஜிம்பாப்வேவுக்கு செல்ல முடியவில்லை.

- Advertisement -

எனவே அந்த மூவருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ரனா ஆகியோர் ஜிம்பாப்வே டி20 தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் அசத்திய சாய் சுதர்சன் இந்தியாவுக்காக விளையாடிய போட்டிகளிலும் அசத்தினார். ஆனால் அவருக்கு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: ரோஹித் இருந்துருந்தா இதை செஞ்சுருப்பேன்.. பவுண்டரியில் கால் உரசியதா? கேட்ச் பிடித்தது எப்படி? சூரியகுமார் பேட்டி

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விரைவில் நாடு திரும்ப உள்ளது. அவர்கள் வந்ததும் சிவம் துபே, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஜுன் 6ஆம் தேதி இந்தியாவிலிருந்து ஜிம்பாபேவுக்கு புறப்பட உள்ளனர். அங்கே சென்ற பின் அந்த மூவரும் கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் இணைவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -