சி.எஸ்.கே அணியில் விளையாட வாய்ப்பு தரலனாலும் எங்களை இப்படித்தான் தோனி ட்ரீட் பண்ணாரு – சாய் கிஷோர் பகிர்வு

Sai-kishore
- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு ப்ளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் வெளியேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ரசிகர்களுக்கும் மோசமான மனநிலையை கொடுத்திருக்கிறது. வெகுவாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்று ஒரு விமர்சனம் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

- Advertisement -

முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி வராமல் வெளியேறியதால் இந்த விமர்சனம் வலுவாகி விட்டது.அதன் பின்னர் பல இளம் வீரர்களுக்கு சென்னையில் வாய்ப்பு கொடுத்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் வீரர்கள் இவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பது குறித்து பேசியுள்ளார் இளம் தமிழக வீரர் சாய் கிஷோர்.

இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டவர் இந்த இவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். உயரமாக இருக்கும் இவர் தனது சுழற்பந்து வீச்சின் மூலம் சென்ற வருட சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதன் காரணமாக இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இதுகுறித்து அவர் பேசுகையில்…

Kishore-2

சென்னை அணியை பொறுத்தவரை ஒவ்வொரு இளம் வீரர்களுக்கும் போதுமான வசதி அளிக்கப்பட்டது. இதனைத் தான் முதலில் உறுதி செய்வார்கள். அணியின் மூத்த வீரர் என்ற பாகுபாடு எப்போதும் இருந்ததில்லை. நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருந்தபோது தோனி எங்களில் ஒவ்வொருவராக அணுகி எங்களை நல்ல முறையில் வைத்துக் கொள்ளவும், எங்களது மனநிலையை சரியாக வைத்துக் கொள்ளவும் உதவியிருந்தார்.

kishore

எங்களது அணி நிர்வாகமும் இதற்கு ஏற்றார் போல் செயல்பட்டது. எந்தவிதத்திலும் வீரர்களை களைப்படையவோ அல்லது சோர்வடையவோ விட்டதில்லை. என்னை போன்ற இளம் வீரர்களை அணியில் இருக்கும் பல மூத்த வீரர்களையும் சரிசமமாக எங்களது அணி நிர்வாகம் கையாண்டது. இதுதான் எங்களது அணியில் இருக்கும் மிகச் சிறப்பான ஒன்று என்று தெரிவித்திருக்கிறார் சாய் கிஷோர்.

Advertisement