2 வயது சிறுவன் விளையாடும் கிரிக்கெட் பார்த்து வியந்த சச்சின்..! – வைரலாகும் வீடியோ

sachin
- Advertisement -

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் பல பேர் இருந்தாலும், இன்றளவும் காட் ஆப் கிரிக்கெட் என்று அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுலகர் மட்டுமே. கவாஸ்கருக்கும் பின்னர் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் அதிகம் பார்க்க காரணம் சச்சின் தான். அதனால் தான் சச்சினுக்கு இந்த தலைமுறையிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
sachin50
சச்சினை கண்டு பல பேர் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் காட்டியுள்ளனர். அதே போல சச்சின் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றலும் இன்றளவும் இவருக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சச்சினுக்கு இரண்டு வயது சிறுவன் ஒருவர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ பதிவு ஒன்றை ட்விட்டரில் ஒரு நபர் அனுப்பியுள்ளார்.

ட்விட்டரில் மோஷின் என்ற நபர் தனது சகோதரரின் 2 வயது மகன் ஆஷிம், கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுருந்தார், மேலும், அந்த வீடியோவில், அவர் நன்றாக விளையாடுகிறாரா? என்று கோலி, சச்சின், தோனி ஆகியோரை tag செய்திருந்தார்.

- Advertisement -


இதற்கு வீடியோவை பதிலளித்த சச்சின் நவீன காலத்தின் சிறந்த விளையாட்டு வீரர். சிறந்த தொடக்கம் ஆஷிம். தொடர்ந்து விளையாடுங்கள்..சந்தோஷமாக விளையாடுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள் எப்போதும் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement