- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என் நண்பன் சாதிச்சுட்டான்.. வாழ்க்கை ஒரு வட்டம்.. அங்க தான் இந்தியா பவர்ஹவுஸா உருவாகிருக்கு.. சச்சின் பாராட்டு

ஐசிசி 2024 உலகக்கோப்பையின் சாம்பியன் பட்டத்தை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்துள்ளது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வித்யாசத்தில் வீழ்த்தியது. அதனால் 2007க்குப்பின் வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது.

அத்துடன் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தோல்விகளையும் உடைத்த இந்தியா உலகின் புதிய டி20 சாம்பியனாக சாதனை படைத்தது. இந்த வெற்றியுடன் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். அதே போல பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டும் சாம்பியன் பட்டத்தை வென்று விடைபெற்றார்.

- Advertisement -

சச்சின் வாழ்த்து:
இந்நிலையில் தம்முடைய நண்பன் ராகுல் டிராவிட் ஒரு வழியாக உலகக் கோப்பையை வென்று சாதித்துள்ளதாக ஜாம்பவான் சச்சின் பாராட்டியுள்ளார். மேலும் 2007 உலகக் கோப்பை தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தற்போது இந்தியா உலக கிரிக்கெட்டின் பவர் ஹவுஸாக விஸ்வரூபம் எடுத்து வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபித்துள்ளதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 1996இல் அறிமுகமான இந்திய வீரர்கள் துணைப் பயிற்சியாளராக வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிவிக்கும் அவர் ரோகித், விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட அனைத்து வீரர்களையும் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பின்வருமாறு. “இந்திய அணியின் ஜெர்சியில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு நட்சத்திரமும் நம் நாட்டின் நட்சத்திர கண்களைக் கொண்ட குழந்தைகளை அவர்களின் கனவுகளுக்கு ஒரு படி மேலே செல்ல தூண்டுகிறது”

- Advertisement -

“இந்தியா 4வது நட்சத்திரத்தை பெற்று 2வது டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய கிரிக்கெட்டின் வாழ்க்கை வட்டமாக மாறியுள்ளது. அங்கே 2007 ஒருநாள் உலகக் கோப்பையில் கீழே விழுந்த நாங்கள் தற்போது 2024 டி20 உலகக் கோப்பையை வென்று கிரிக்கெட்டின் பவர்ஹவுஸாக வந்துள்ளோம். என்னுடைய நண்பன் ராகுல் டிராவிட்டுக்காக மகிழ்ச்சி”

“அவர் 2011 உலகக் கோப்பை வெற்றியில் இல்லை. ஆனால் இந்த டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு அவர் அளப்பரிய பங்காற்றினார். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ரோஹித் சர்மா பற்றி நான் என்ன சொல்வது? சூப்பரான கேப்டன்ஷிப். 2023 உலகக்கோப்பை தோல்வியை பின்னே வைத்து அனைத்து வீரர்களையும் இந்த டி20 உலகக் கோப்பையில் உத்வேகத்துடன் நடத்தியது அற்புதமானது”

இதையும் படிங்க: 25 வருஷ கனவு.. எங்க எல்லாரையும் விட தகுதியான அவருக்காக தான் உலகக் கோப்பையே ஜெய்ச்சோம்.. ரோஹித் பாராட்டு

“ஜஸ்ப்ரித் பும்ரா தொடர்நாயகன் மற்றும் விராட் கோலி ஃபைனலில் ஆட்டநாயகன். அவர்கள் இருவரும் இந்த விருதுகளுக்கு தகுதியானவர்கள். அவர்கள் தேவையான நேரத்தில் சூப்பராக செயல்பட்டனர். டிராவிட்டுடன் பராஸ் மாம்ப்ரே, விக்ரம் ரத்தோர் ஆகியோரும் 1999இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்கள். அந்த 1999 வகுப்பின் வழிகாட்டுதலில் இந்தியா தற்போது வென்றுள்ளதை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது. மொத்தமாக இது அணியின் முயற்சி. வீரர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் பிசிசிஐ”க்கு மனதார வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

- Advertisement -