- Advertisement -

ஸ்மித் பேட்டிங் டெக்னிக் சொதப்பலா இருந்தாலும் அவர் சிறப்பாக விளையாட இதுவே காரணம் – சச்சின் விளக்கம்

ங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் சமனானது.

இந்த தொடரில் ஒரு வருட தடை பிறகு மீண்டும் திரும்பி வந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்மித் அபாரமாக விளையாடி 4 போட்டிகளில் 774 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் இந்தத் தொடர் முழுவதும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவருடைய விக்கெட் வீழ்த்துவது என்பது இந்த தொடரில் சிரமமான விடயமாக அமைந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஸ்மித் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த ஆஷஸ் தொடரில் ஸ்மித் மிகப் பிரமாதமாக ஆடினார். அவரது ரன் குவிப்பு பிரமிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தது உண்மைதான் இருப்பினும் அவர் பேட்டிங் டெக்னிக்கில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தன.

வித்தியாசமான ஸ்டேன்ஸ் மற்றும் வித்தியாசமான ஷார்ட் தேர்வு என அனைத்துமே அவர் சாதாரணமான நிலைகள் இல்லாமல் அவருடைய தேர்வு வித்தியாசமாக இருந்தது. அவருடைய டெக்னிக் தவறாக இருந்தாலும் அவருடைய மனநிலை இந்த தொடரில் பிரமாதமான ஆடவேண்டும் ரன்களை குவிக்க வேண்டும் என்றே இருந்தது. அதனால் ஒவ்வொரு பந்தையும் கவனித்து ரன் குவிக்க வேண்டும் என்ற மனநிலையோடு விளையாடினார். அந்த அவரின் அந்த மனநிலையே அவர் சிறப்பாக விளையாட காரணமாக அமைந்தது என்று சச்சின் கூறினார்.

- Advertisement -
Published by