- Advertisement -
ஐ.பி.எல்

முதல் சீசனில் தோனியிடம் 2 விஷயம் கத்துக்கிட்டேன்.. கேப்டனா மாறினாலும் அதுல மாறமாட்டேன்.. ருதுராஜ் பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியனாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு எம்எஸ் தோனி தன்னுடைய சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை கையில் ஒப்படைத்தார். இருப்பினும் அவருடைய தலைமையில் ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு தடுமாறிய சென்னை 14 போட்டியில் 7 வெற்றி 7 தோல்விகளை பதிவு செய்தது.

குறிப்பாக பெங்களூரு அணியிடம் கடைசிப் போட்டியில் தோல்வியை சந்தித்த சென்னை வரலாற்றில் 3வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் நூலிலையில் வெளியேறியது. அதன் காரணமாக சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடி கோப்பையை வென்று தோனியை வெற்றிகரமாக அனுப்பும் வாய்ப்பையும் சென்னை நழுவ விட்டது. இருப்பினும் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் ஓரளவு நன்றாகவே செயல்பட்டார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

தோனியின் சிஷ்யன்:
முதலில் மும்பை அணியின் பாண்டியாவை போல அவருக்கு சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்காததே மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. அத்துடன் குஜராத்துக்கு கோப்பையை வென்ற அனுபவிக்க பாண்டியா தலைமையில் மும்பை 10வது இடத்தை பிடித்தது. ஆனால் கிட்டத்தட்ட தோனி போல அமைதியுடன் செயல்பட்ட ருதுராஜ் தலைமையில் டேவோன் கான்வே போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே சென்னை 5வது இடத்தை பிடித்தது.

எனவே வருங்காலங்களில் அவருடைய தலைமையில் சென்னை கோப்பையை வெல்லும் என்று உறுதியாக நம்பலாம். இந்நிலையில் எந்த சூழ்நிலையிலும் நடுநிலையாக இருப்பதையும் எதற்காகவும் அதிகமாக ரியாக்சன் கொடுக்காமல் இருப்பதையும் தோனியிடம் கற்றுக் கொண்டதாக ருதுராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன் கேப்டனாக முன்னேறினாலும் பேட்ஸ்மேனாக தாம் மாறவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆரம்பத்திலிருந்தே நான் நன்றாக உணர்ந்தேன். தேவைப்படும் போதெல்லாம் என்னுடைய அணி வீரர்கள் எனக்கு ஆதரவு கொடுக்க தயாராக இருந்தனர். அந்த வகையில் அனைவரும் புரிந்து கொண்டதால் கேப்டன்ஷிப் கடினமாக இருந்ததாக நான் சொல்ல மாட்டேன். எங்கள் அணியில் அனைத்து சீனியர்களுடன் இருந்தது நன்றாக இருந்தது. அவர்களுடைய அனுபவம் போட்டி சூழ்நிலைகளில் உதவியது”

இதையும் படிங்க: சச்சினுக்கு அடுத்து தோனியை தான் இப்படி பார்க்கிறேன்.. லக்னோ அணியின் பயிற்சியாளர் – ஜஸ்டின் லாங்கர் ஆச்சரியம்

“நடுநிலையுடன் இருப்பதை நான் மஹி பாயிடம் இருந்து கற்றுக்கொண்டேன். எதற்காகவும் அதிகம் உற்சாகமடையாமல் இருப்பது அல்லது எதற்காகவும் மனம் தளராமல் இருப்பது தான் நான் எடுத்த சரியான அணுகுமுறை. கேப்டனாக இருக்கிறேனா இல்லையா என்பதை தாண்டி பேட்ஸ்மேனாக என்னுடைய அணுகுமுறை மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. நீங்கள் கேப்டனாக மாற திட்டமிட முடியாது. எனவே நல்ல அணி வீரர்களாக இருப்பது மற்றும் அணிக்கு முதலிடம் கொடுப்பதே கேப்டனாக இருப்பதற்கு நல்ல வாய்ப்பாகும்” என்று கூறினார்.

- Advertisement -