- Advertisement -
ஐ.பி.எல்

KKR vs RCB : நான் 4 ஆவது இடத்தில் இறங்குவதற்கு தயார். ஆனால் அது அணிக்கு ஆபத்து – ரசல் பேட்டி

ஐ.பி. தொடரின் 35 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா அணி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 58 பந்துகளில் 100 ரன்களும், மொயின் அலி 28 பந்தில் 66 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பிறகு 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. ரசல் 25 பந்துகளில் 65 ரன்களும், ராணா 46 பந்துகளில் 85 ரன்களையும் குவித்தனர். பெங்களூரு அணி வெற்றியை ருசித்தது கேப்டன் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ரசல் கூறியதாவது : இந்த போட்டியில் தோல்வி அடைந்தது உண்மையில் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதுபோன்ற போட்டிகளில் தான் நாம் 200 க்கு மேல் இருக்கும் இலக்கை எப்படி அடைய முடியும் என்று கற்றுக்கொள்ள முடியும். இந்த போட்டியில் மிடில் ஓவர்களில் கொஞ்சம் அதிரடியாக ஆடி இருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். இறுதியில் நானும் நிதிஷும் சிறப்பாக ஆடினோம் இருந்தும் 10 ரன்களில் தோற்றது வருத்தம் அளிக்கிறது.

நான் 4 ஆவது இடத்தில் இறங்குவது குறித்த யோசனை நல்லதுதான். ஆனால், நான் இறுதியில் ஆடினால் கடைசி 4-5 ஓவர்களை சிறப்பாக விளையாட முடியும். முன்கூட்டியே இறங்கி நான் அவுட் ஆகி விட்டால் அது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேலும், நடுவரிசையில் என்னை விட திறமையானவர்கள் ஆடுகின்றனர். அதனால் இப்போதைக்கு 4 ஆவது இடத்தில் இறங்குவது குறித்து யோசிக்கவில்லை என்று கூறினார்.

- Advertisement -
Published by