Andre Russell : ஹாட்ரிக் சிக்ஸரை அடித்து பெங்களூரு அணியை அலறவிட்ட ரசல் – வீடியோ

ஐ.பி. தொடரின் 35 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமை

Russell
- Advertisement -

நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணிக்கு 214 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஒரு சமயத்தில் 12 ஓவர்களுக்கு வெறும் 79 ரன்களை மட்டும் எடுத்திருந்த கொல்கத்தா அணி மீதி 8 ஓவர்களில் 118 ரன்களை சேர்த்தது. இதற்கு முக்கிய காரணம் ரசல் 25 பந்தில் 9 சிக்ஸர்களை அடித்தார். அதிலும் குறிபாக சாஹல் வீசிய 15 ஓவரில் அடுத்தது மூன்று சிக்ஸர்களை அடித்து அலறவிட்டார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி. தொடரின் 35 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா அணி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 58 பந்துகளில் 100 ரன்களும், மொயின் அலி 28 பந்தில் 66 ரன்களையும் குவித்தனர்.

பிறகு 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. ரசல் 25 பந்துகளில் 65 ரன்களும், ராணா 46 பந்துகளில் 85 ரன்களையும் குவித்தனர். பெங்களூரு அணி வெற்றியை ருசித்தது கேப்டன் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement