வீடியோ : முதல் பந்திலேயே ஏ.பி.டி யை க்ளீன் போல்டாக்கிய ரசல் – கோல்டன் டக்

abd
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 14-வது ஐபிஎல் தொடரின் முதலாவது பாதியில் சிறப்பான துவக்கத்தை பெற்றிருந்தது. முதல் பாதி தொடரில் 7 போட்டிகளில் விளையாடி இருந்த அந்த அணி 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் கொல்கத்தா அணியை சந்தித்த பெங்களூரு அணி ரசல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரது சிறப்பான பந்துவீச்சு காரணமாக மோசமான தோல்வியை சந்தித்தது.

russell

- Advertisement -

பெங்களூரு அணியின் டாப் ஆர்டர் வீரர்களை மொத்தமாக சுருட்டி வீசிய கொல்கத்தா அணியானது 92 ரன்களுக்குள் அவர்களை ஆட்டம் இழக்க வைத்தது. அதன் பின்னர் 10 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அடுத்தடுத்து பெங்களூரு அணி வீரர்கள் ஆட்டம் இழந்து வெளியேறியபோது நம்பிக்கை நட்சத்திரமான ஏ.பி.டி களத்திற்கு வந்ததும் நிச்சயம் ஒரு நல்ல ஸ்கோருக்கு அழைத்துச் செல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் ஏ.பி.டி வந்த வேகத்தில் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ரசல் ஏ.பி.டி யை க்ளீன் போல்டாக்கினார். எப்போதுமே கொல்கத்தா அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடும் ஏ.பி.டி இம்முறையும் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசல் தனது முதல் பந்திலேயே தனது சரியான யார்க்கர் மூலம் ஸ்டெம்பை பதம் பார்த்தார்.

இதனால் டிவில்லியர்ஸ் சற்று வருத்தத்துடன் வெளியேறினார். ஐபிஎல் தொடரில் டிவில்லியர்ஸ் இதேபோன்று முதல் பந்தில் அவுட் ஆவது ஆறாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement