7க்கு 7 வெற்றி.. சோதித்த மழை.. சோக் செய்யாமல் வெஸ்ட் இண்டீஸை வெளியேறிய தெ.ஆ.. உலக சாதனை

- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையில் ஜூன் 24ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு 50வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் செமி ஃபைனலுக்கு செல்ல கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரான் 1 ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் 5/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல் மேயர்ஸ் – ராஸ்டன் சேஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு முக்கியமான 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரி செய்தனர்.

- Advertisement -

சொதப்பாத தென் ஆப்பிரிக்கா:
அதில் தடுமாற்றமாகவே விளையாடிய துவக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 35 (34) ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் ரோவ்மன் போவல் 1 ரன்னில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்ததாக வந்த ரூத்தர்போர்ட் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த ஆண்ட்ரே ரசல் 15, அகில் ஹொசைன் 6 ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர்.

அதனால் கடைசியில் ராஸ்டன் சேஸ் 52 (42) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 135/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக தப்ரிஸ் சம்சி 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அப்போது மழை வந்ததால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 17 ஓவரில் 123 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு உருவாக்கப்பட்டது. அதை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ரீசா ஹென்றிக்ஸை டக் அவுட்டாக்கிய ஆண்ட்ரே ரசல் மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த டீ காக்’கை 12 (7) ரன்னில் காலி செய்தார்.

- Advertisement -

அப்போது வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் நிதானமாக விளையாட முயற்சித்து 18 (15) ரன்னில் அவுட்டானார். மறுபுறம் ட்ரிஷன் ஸ்டப்ஸ் நங்கூரமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் அதிரடி காட்ட முயற்சித்த ஹென்றிச் க்ளாஸென் 22 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த டேவிட் மில்லர் தடுமாறி 4 (14) ரன்களில் அவுட்டானது தென்னாப்பிரிக்காவுக்கு கொடுத்தது.

அடுத்த சில ஓவரிலேயே ஸ்டப்ஸ் 29 (27) ரன்களிலும் அடுத்து வந்த கேசவ் மகாராஜ் 2 ரன்களிலும் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அப்போது வந்த மார்க்கோ யான்சென் கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது சிக்ஸருடன் 21* (14) ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். மேலும் இத்தொடரில் லீக் சுற்றில் 4, சூப்பர் 8இல் 3 என தென்னாப்பிரிக்கா தொடர்ந்து 7 வெற்றிகளை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரோடு சேர்த்து 4 வீரர்களை இந்திய அணியில் இருந்து நீக்க – கம்பீர் அதிரடி முடிவு

இதன் வாயிலாக ஒரு உலகக் கோப்பையில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற உலக சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன் 2009, 2010, 2021 தொடர்களில் இலங்கை, ஆஸ்திரேலியா (2 முறை) தலா 6 வெற்றிகள் பெற்றதே முந்தைய சாதனையாகும். அதனால் ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது செமி ஃபைனலில் இந்திய அணியுடன் தென்னாப்பிரிக்கா மோதுவது 90% உறுதியாகியுள்ளது. மறுபுறம் ராஸ்டன் சேஸ் 3, ஆண்ட்ரே ரசல் 2, அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் சொந்த மண்ணில் பரிதாபமாக வெளியேறியது.

Advertisement