31 வருடம் 17 தோல்வி.. ஆப்கானிஸ்தானை அசால்ட்டாக ஊதி வெளியேற்றிய தெ.ஆ.. வரலாற்று சாதனையுடன் ஃபைனலுக்கு தகுதி

- Advertisement -

ஐசிசி 2024 20 உலகக் கோப்பையின் முதல் அரை இறுதிப் போட்டி ஜூன் 27ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு ட்ரினிடாட் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் வெற்றி கண்ட தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கி அந்த அணியின் முதுகெலுப்பான துவக்க வீரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராஹீமை ஆரம்பத்திலேயே தென்னாப்பிரிக்கா 0, 2 ரன்களில் அவுட்டாக்கி உடைத்தது. அப்படியே குல்பதின் 9, முகமது நபி 0, கரீம் ஜானத் 8, கேப்டன் ரசித் கான் 8 என அடுத்து வந்த வீரர்களையும் தென்னாபிரிக்கா ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்தது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா சாதனை:
அதனால் 11.5 ஓவரிலேயே ஆப்கானிஸ்தானை வெறும் 56 ரன்களுக்கு சுருட்டி தென்னாபிரிக்கா தெறிக்க விட்டது. ஆப்கானிஸ்தானின் 10 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அதிகபட்சமாக ஓமர்சாய் 11 ரன்கள் எடுத்தார். அந்தளவுக்கு பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 3, ரபாடா 2, அன்றிச் நோர்ட்ஜெ 2, சம்சி 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து வெறும் 57 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு டீ காக் 5 (8) ரன்களில் பரூக்மி வேகத்தில் அவுட்டானார். ஆனால் ரீசா ஹென்றிக்ஸ் 29* ரன்களும் கேப்டன் மார்க்ரம் 23* ரன்களும் எடுத்து 8.5 ஓவரிலேயே தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முதல் அணியாக தகுதி பெற்றது.

- Advertisement -

சொல்லப்போனால் இதன் வாயிலாக ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஃபைனலுக்கு தகுதி பெற்று தென்னாப்பிரிக்கா புதிய வரலாற்று சாதனையும் படைத்துள்ளது. இதற்கு முன் ஒருமுறை 1998 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலுக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்ற கோப்பையும் வென்றது. ஆனால் 1992இல் துவங்கி 2023 வரை கடந்த 31 வருடங்களில் நடைபெற்ற 17 டி20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளில் தென்னாப்பிரிக்கா ஃபைனலுக்கு கூட தகுதி பெற்றதில்லை.

இதையும் படிங்க: முடிவுக்கு வந்த ஆப்கானிஸ்தான் அணியின் கனவு.. இறுதிப்போட்டிக்கு முன்னேறியா தென்னாப்பிரிக்கா – விவரம் இதோ

இருப்பினும் இம்முறை அந்த வாழ்நாள் வேதனையை உடைத்துள்ள தென்னாப்பிரிக்கா 18வது முயற்சியில் உலகக் கோப்பை வரலாற்றில் ஃபைனலுக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். மறுபுறம் இந்த தொடரில் அற்புதமாக போராடி வந்த ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலில் போராடாமலேயே பரிதாபமாக வெளியேறியது. அதனால் அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் சோகமடைந்துள்ளனர்.
இருப்பினும் செமி ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெற்றதே அந்த அணியை பொறுத்த வரை மிகப் பெரிய சாதனையாகும்.

Advertisement