- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிராக தெ.ஆ இந்த திட்டத்தை மட்டும் தான் யோசிக்கும்.. அதை சமாளிச்சிட்டா கப் நமக்குத்தான்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது இன்று பார்படாஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் எவ்வாறு செயல்பட போகிறார்கள் என்பதையும் உற்றுநோக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக தென்னாபிரிக்க அணி ஒரு முக்கிய திட்டத்தை தீட்டும் என்றும் அந்த ஒரு வியூகத்தை மட்டும் நாம் உடைத்து விட்டால் நிச்சயம் நமக்குத் தான் கப் என்று உறுதியாக கூறும் அளவிற்கு ஒரு தகவலை நாம் இங்கு காணலாம்.

- Advertisement -

அதன்படி இந்திய அணி எப்போதுமே சிறப்பான பேட்டிங் படையை கொண்ட அணியாக இருந்து வருகிறது. அதன் காரணமாகவே இந்திய அணியால் தொடர்ச்சியாக பெரிய பெரிய தொடர்களில் இறுதிவரை செல்ல முடிகிறது. அதேபோன்று தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரை பொருத்தவரை அவர்களது பந்துவீச்சை வைத்து தான் இறுதிவரை வந்துள்ளனர்.

எனவே இன்றைய இறுதிப்போட்டியிலும் தங்களது பந்துவீச்சை தான் ஆயுதமாக பயன்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் சில வீரர்களுக்கு ஷார்ட் பால் பிரச்சனை இருப்பதினால் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிகளவு ஷார்ட் பால்களை வீசவே முயற்சிப்பார்கள். குறிப்பாக ரிஷப் பண்ட், ஷிவம் துபே, ஜடேஜா போன்ற வீரர்களுக்கு இந்த பிரச்சனை இருந்து வருகிறது.

- Advertisement -

அதன் காரணமாக அவர்கள் நிச்சயம் மிடில் ஓவர்களில் ஷார்ட் பால்களையே அதிகளவு பயன்படுத்த யோசிப்பார்கள். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சுதாரித்தாலும் மற்ற வீரர்களுக்கு இந்த பிரச்சனை இருந்து வருவதாகவே தெரிகிறது. எனவே இந்த திட்டத்தை அவர்கள் கையில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதை மட்டும் நாம் கவனமாக எதிர்கொண்டு விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே பார்முலாவை கையிலெடுத்த ரோஹித் சர்மா.. கப் நமக்கு தான் கவலைப்படாதீங்க – விவரம் இதோ

இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் அவ்வளவு பவுன்ஸ் இருக்காது என்பதனால் பந்து பெரியளவில் உயரமாக வராது என்றும் கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும் இன்றைய போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையுடன் நாடு திரும்ப வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -