இந்திய அணியை விடுங்க.. தெ.ஆ அணி பைனலுக்கு செல்ல காரணமே இதுதான் – ஒப்புக்கொண்ட மார்க்ரம்

Markram
- Advertisement -

கடந்த ஒரு மாதமாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூன் 29-ஆம் தேதி நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். எதிர்வரும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதனால் இந்த இறுதிப் போட்டியானது அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த இறுதி போட்டிக்கு தகுதியான இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்த பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் பலம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாக்கியது. அதனை தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்க அணியின் பலம் என்ன? என்பதை இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியை போன்று தென்னாப்பிரிக்க அணியும் தோல்வியையே சந்திக்காமல் இறுதி போட்டி வரை வந்திருந்தாலும் அந்த அணி இப்படி இறுதிப் போட்டியில் வந்ததற்கு முக்கிய காரணமே அவர்களின் சிறப்பான பந்துவீச்சு மட்டும்தான் என்பது நிதர்சனமான உண்மை.

ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே ரீஸா ஹென்றிக்ஸ், எய்டன் மார்க்ரம், கிளாசன் போன்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. குறைந்த அளவிலேயே ரன்கள் அடித்திருந்தாலும் ரபாடா, நோர்க்கியா, ஷம்ஸி, மகாராஜ் போன்ற பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு காரணமாகவே அவர்கள் எதிரணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டி வரை வந்துள்ளனர்.

- Advertisement -

இதனை ஏற்கனவே மார்க்ரமும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்பு பேசிய மார்க்ரம் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் டாசில் வெற்றி பெற்றிருந்தால் பேட்டிங் தான் செய்திருப்போம். ஆனால் நல்ல வேலையாக அதிர்ஷ்டம் எங்கள் வசம் இருந்தது. எங்களது பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் அணியை மிக குறைந்த ரன்களில் சுருட்டி விட்டனர்.

இதையும் படிங்க : கேன் வில்லியம்சனுக்கு அடுத்து இந்த சாதனையை செய்த 2 ஆவது கேப்டன் ரோஹித் சர்மா தானாம் – விவரம் இதோ

எந்த தொடர் முழுவதுமே எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் ஜொலித்ததால் தான் நாங்கள் இங்கு நிற்கிறோம். இந்த தொடர் முழுவதும் எங்களது பேட்டிங்கில் சற்று சரிவு தென்பட்டாலும் பந்துவீச்சாளர்களே இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர் இந்த விடயத்தை அவரே ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement