- Advertisement -
ஐ.பி.எல்

17 வருடம்.. ஆர்சிபி’யின் ஈ சாலா கோப்பை கனவை சுக்கு நூறாக உடைத்த ராஜஸ்தான்.. வீட்டுக்கு கிளம்பியது எப்படி?

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டி மே 22ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் நான்காவது இடங்களை பிடித்த ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 17 (14) ரன்களில் ரோவ்மன் போவல் அற்புதமான கேட்ச்சால் அவுட்டானார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த விராட் கோலியும் 33 (24) ரன்களில் சஹால் சுழலில் அவுட்டானார். அப்போது ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் மற்றும் ரஜத் படிடார் அதிரடியாக விளையாட முயற்சித்தனர்.

- Advertisement -

வெளியேறிய ஆர்சிபி:
ஆனால் அதில் கேமரூன் கிரீனை 27 (21) ரன்களில் அவுட்டாக்கிய அஸ்வின் அடுத்ததாக வந்த கிளன் மேக்ஸ்வெலை கோல்டன் டக் அவுட்டாக்கி போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார். அடுத்த சில ஓவரிலேயே ரஜத் படிடார் 34 (22) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த தினேஷ் கார்த்திக் 11 (13) ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் மகிபால் லோம்ரர் 32 (17) ஸ்வப்னில் சிங் 9* (4) ரன்கள் எடுத்ததால் பெங்களூரு 20 ஓவரில் 172/8 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 3, ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 173 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடிய நிலையில் மறுபுறம் கொஞ்சம் தடுமாறிய டாம் கோலர்-கேட்மோர் 20 (15) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் அசத்தலாக விளையாடிய ஜெய்ஸ்வால் 8 பவுண்டரியுடன் 45 (30) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் 3வது இடத்தில் களமிறங்கியிருந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 17 (13) ரன்களில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 8 (8) ரன்னில் விராட் கோலியின் அபாரத்தால் ரன் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். இருப்பினும் 4வது இடத்தில் களமிறங்கிய ரியான் பராக் நிதானம் கலந்த அதிரடி வெளிப்படுத்தினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த சிம்ரோன் ஹெட்மயர் அதிரடியாக விளையாடினார்.

அந்த வகையில் இந்துஸ்தானி வெற்றி பாதைக்கு அழைத்து வந்த இந்த ஜோடியில் ரியான் பராக்கை 36 (26) ரன்னில் அவுட்டாக்கிய சிராஜ் மறுபுறம் ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மயரையும் 26 (14) ரன்களில் அவுட்டானார். அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் அடுத்ததாக வந்த ரோவ்மன் போவல் 16* (8) ரன்கள் விளாசி அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: கொந்தளித்த சங்ககாரா, கவாஸ்கர்.. நாக் அவுட்டில் ஆர்சிபிக்கு சாதகமாக மாறிய அம்பயர்? கடைசியில் நேர்ந்த சோகம்

அதனால் 19 ஓவரிலேயே 174/5 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியின் 17 வருட ஈ சாலா கோப்பை கனவை சிதைத்து எலிமினேட் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அதன் காரணமாக நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் குவாலிபர் 2 போட்டியில் ஹைதராபாத் எதிர்கொள்ள ராஜஸ்தான் தகுதி பெற்றது. மறுபுறம் சிராஜ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் எக்ஸ்ட்ரா ரன்கள் எடுக்க தவறிய பெங்களூரு சென்னைக்கு வராமலையே பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -