நாங்கள் தோற்றிருந்தாலும் பரவாயில்ல.. மீண்டும் இது நடந்திருப்பது மகிழ்ச்சி – வெ.இ கேப்டன் பவல் கருத்து

Powell
- Advertisement -

நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது கடைசி கட்டத்தினை நோக்கி நகர்ந்து வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் குரூப் சுற்றின் முடிவில் சூப்பர் 8 சுற்றுக்கு 8 அணிகள் முன்னேறின. அதில் தற்போது முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியுள்ளன. இந்த தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணியும் முன்னேறியுள்ளது.

அதே வேளையில் இந்த தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஏற்கனவே இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ள வேளையில் மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த வேளையில் அவர்கள் தோல்வியை சந்தித்து சூப்பர் 8 சுற்றுடன் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.

- Advertisement -

என்னதான் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுடன் தோற்று இருந்தாலும் தாங்கள் விளையாடிய விதம் பெருமை அளிப்பதாக அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : எங்களது அணி இந்த தொடரில் வெளியேறி இருந்தாலும் நாங்கள் சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம்.

குறிப்பாக தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் எங்களது பேட்டிங் சரியில்லை என்றாலும் பந்துவீச்சில் நாங்கள் இறுதிவரை போராடினோம். இந்த தொடரில் எங்களுக்கு செயல்பாடு நன்றாகவே இருந்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது தான் எங்களது ஆட்டம் சரிவை சந்தித்து தோல்வியை நோக்கி நகர்ந்தது.

- Advertisement -

அதேசமயம் எங்களது மற்ற செயல்பாடுகள் அனைத்தும் பாராட்ட வேண்டிய ஒன்று.. எங்களுடைய முழு செயல்பாட்டையும் நாங்கள் கடைசி வரை வெளிப்படுத்தியிருந்தோம். அந்த திறனை நினைத்தால் எனக்கு நிச்சயம் மகிழ்ச்சியாகவே உள்ளது. கடந்த ஓராண்டாகவே நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம்.

இதையும் படிங்க : ஸ்டார்க்கை ரோஹித் அழிச்சுடாரு.. இந்த காரணத்தால் 100% இந்தியா உ.கோ ஜெய்க்கனும்.. வாழ்த்திய அக்தர்

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் ஒன்பதாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு நகர்வது என்றால் சாதாரண விடயம் கிடையாது. அந்த வகையில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறோம் என தோல்வி குறித்து பேசியதோடு சேர்த்து ரோவ்மன் பவல் மன்னிப்பும் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement