இதுதான் எங்களது தோல்விக்கு காரணம் – ரோஹித் சர்மா வேதனை

Rohith
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 20 ஓவர்களில் 213 ரன்களை குவித்தது. இதனால், 214 ரன்கள் மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Delhi

- Advertisement -

அடுத்து ஆடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா சிறப்பாக பந்துவீசி 23 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 27 பந்துகளில் 78 ரன்களை அடித்த டெல்லி அணி வீரர் பண்ட் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த போட்டியின் தோல்வி குறித்து பேசிய ரோஹித் :எப்போதும் தொடரின் முதல் போட்டியில் தோல்வி சந்திக்கும் அணிகளுக்கு முக்கிய காரணம் அணியில் புதிய வீரர்கள் இருப்பதால் தான். ஏனெனில் ஒரு அணியை கட்டுக்கோப்பாக தயார் செய்ய சில போட்டிகள் தேவைப்படும். இந்த போட்டியில் முதல் பத்து ஓவர்கள் வரை போட்டி எங்களது கட்டுக்குள் தான் இருந்தது.

dc

அதன் பிறகு பண்ட் விளையாடிய விதமே ஆட்டத்தை மாற்றியது. மேலும், எங்களது பந்துவீச்சாளர்கள் இன்றைய போட்டியில் சரியான இடத்தில பந்துகளை வீச தவறினர். மேலும் இலக்கு பெரியதாக இருந்ததால் எங்களால் முடிந்த வரை துரத்தி கோட்டை விட்டோம். இந்த போட்டியின் தோல்வியை மறந்து அடுத்த போட்டிக்கு நாங்கள் தயாராகி வருவோம் என்று ரோஹித் கூறினார்.

Advertisement