- Advertisement -
இந்திய கிரிக்கெட்

23 ரன்களில் மிகப்பெரிய உலக சாதனையை சாதனையைத் தவறவிட்ட ரோகித் சர்மா – விவரம் இதோ

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 431 ரன்களை குவித்தது.

அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நான்காம் நாள் இன்று அதிரடியாக விளையாடியது. அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 149 பந்துகளில் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் அரிய சிறப்பான ஒரு சாதனை சிறிது இடைவெளியில் தவறவிட்டார்.

- Advertisement -

அது யாதெனில் இதுவரை ஒரே டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் 150 ரன்கள் அடித்த வீரர் என்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பார்டர் சாதனையை ரோகித் சர்மா 23 ரன்கள் வித்தியாசத்தில் நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் முதல் இன்னிங்சில் 176 ரன்கள் குவித்த ரோஹித் இரண்டாவது இன்னிங்சில் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறியது மூலம் மிகப்பெரிய இமாலய உலகசாதனையை அவர் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by