தோனி கிரிக்கெட்டையும் தாண்டி இந்த விளையாட்டில் வல்லவர் – ரகசியத்தை பகிர்ந்த ரோஹித்

- Advertisement -

இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா கடந்த ஆண்டு முதல் மிகச்சிறப்பான உச்சகட்ட பார்மில் உள்ளார். ஒருநாள் மற்றும் டி20 என இருவகையான கிரிக்கெட்டிலும் துவக்க வீரராக களம் இறங்கி வந்த ரோஹித் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கி அசத்தினார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது அபார பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய ரோஹித் தனது குடும்பத்தின் முன் சர்வதேச கிரிக்கெட்டில் 400 ஆவது சிக்ஸரை அடித்து அசத்தினார்.

- Advertisement -

தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் ரோஹித் உலக கோப்பை தொடரில் 5 சதங்கள், தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக அறிமுகப் போட்டியில் சதம் என அசத்திக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளார்.

இதற்கு முன்னர் தற்போது தோனி குறித்து ஒரு முக்கிய விடயத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி ரோகித் கூறியதாவது : இந்திய கிரிக்கெட் அணியில் தோனியின் பங்கு மிக முக்கியமானது, அவரின் ஆட்டம் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் கிரிக்கெட் மட்டுமில்லாது தோனி புட்பால் விளையாடுவதில் சிறந்தவர். தோனியின் புட்பால் நுணுக்கங்கள் அபரிவிதமானது. அவரே இந்திய அணி பெஸ்ட் புட்பாலர் என்றும் நான் கூறுவேன்.

Dhoni

ஏனெனில் அவர் விளையாட்டு துறையை தேர்தெடுக்கும் போது முதலில் ஃபுட்பால் கோல் கீப்பராக தான் இருந்தார் என்பது நமக்குத் தெரியும். அதன் பிறகு கிரிக்கெட்டில் வந்து அவர் சாதித்தவை பற்றியும் நமக்கு தெரியும். இந்திய அணியில் தோனியை விட சிறப்பாக யாராலும் புட்பால் விளையாட முடியாது. அது தவிர இங்கிலாந்து ஃபுட்பால் கிளப் ஆன மான்செஸ்டர் யுனைடெட் என்ற புட்பால் அணிக்கு தோனி தீவிர ரசிகர் என்றும் ரோகித் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement