7 அணிகளுக்கு எதிராக வெறியாட்டம். இந்த ஆண்டு படையை கிளப்பிய டான் ரோஹித் – விவரம் இதோ

Rohith-1
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி துவக்க வீரரான ரோகித் சர்மாவிற்கு இந்த ஆண்டு ஒரு மறக்க முடியாத ஆண்டாக மாறி உள்ளது. ஏனெனில் இதுவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் துவக்க வீரராக களம் இறங்கி வந்த ரோகித் சர்மா இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் டெஸ்ட் போட்டிகளிலும் துவக்க வீரராக களமிறங்கினார்.

Rohith

- Advertisement -

தான் துவக்க வீரராக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த ரோகித் அதற்கடுத்து இரட்டை சதம் அடித்தும் அசத்தினார். மேலும் உலக கோப்பை தொடரில் 5 சதம் என்று தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை இந்த ஆண்டு முழுவதும் காண்பித்து கோலிக்கு கடுமையான போட்டியாளராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ரோஹித் இந்த ஆண்டு வித்யாசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இந்த ஆண்டு 7 அணிகளுக்கு எதிராக விளையாடிய ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார். அந்த ஏழு அணிகளுமே பலமான அணிகள் ஆகும் ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அவர் சதம் அடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

rohith

இந்த ஆண்டு முழுவதும் ரோகித் சர்மாவின் பார்ம் உச்சக்கட்டத்தில் உள்ளது என்றால் அதற்கு இந்த சதங்களே சான்று மேலும் உலக கோப்பை தொடரில் இவர் ஆடிய ஆட்டம் நிச்சயம் அனைவராலும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். அடுத்த ஆண்டு நடக்கும் டி20 தொடருக்கு இந்த பார்ம்மை ரோஹித் கொண்டு செய்வாராயின் இந்திய அணி நிச்சயம் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றும் என்றே கூறலாம்.

Advertisement