3 நாள் ஆட்டத்திற்கு முன்பு சிறப்பு பயிற்சி செய்த ரோஹித் மற்றும் கோலி – என்ன பயிற்சி தெரியுமா ?

IND
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 150 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 493 ரன்கள் எடுத்திருந்தது.

Rahane 1

- Advertisement -

இதனால் தற்போது இந்தியா 343 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேலும் ரஹானே ஜடேஜா மற்றும் புஜாரா ஆகியோர் அரைசதம் அடித்தனர். நேற்றைய ஆட்டநேர முடிவில் ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியதும் ஒரு பந்தினை கூட இந்திய அணி சந்திக்காமல் களமிறங்கும்போதே டிக்ளேர் அறிவித்து பந்துவீச மைதானத்திற்கு வந்தது.

அதன்படி மூன்றாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிவரும் பங்களாதேஷ் அணி தற்போது வரை 40 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில் இந்த போட்டியில் முதல் செஷன் முடிந்ததும் இந்திய அணியின் வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் சிறப்புப் ஸ்லிப் கேட்ச் பயிற்சியினை மேற்கொண்டனர்.

IND

ஏனெனில் இன்றைய போட்டியில் முதல் செஷனின் போது சில கேட்சிகளை கோலி மற்றும் புரோகித் ஆகியோர் ஸ்லிப் பகுதியில் தவறவிட்டனர். இதனால் முதல் செஷன் முடிந்ததும் இருந்த சிறிய இடைவேளையில் அவர்கள் இருவருக்கும் கேட்சிங் பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement