விராட் கோலி ஆடலனா.. நானும் ஆடல விட்ருங்க.. பி.சி.சி.ஐ-யிடம் விட்டு கொடுக்காத ரோஹித் சர்மா – என்ன நடந்தது?

RO-KO
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரை வென்றவுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இப்படி இந்திய அணியின் இருபெரும் தூண்களாக பார்க்கப்பட்ட இவர்களது ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர்களது இந்த ஓய்வு முடிவு கட்டாயமாக எடுக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த ஓய்வு முடிவினை தற்போது எடுக்கவில்லை என்றும் ஆறு மாதத்திற்கு முன்பாகவே அவர்கள் இந்த முடிவை எடுத்து விட்டதாகவும் இந்த ஓய்வு முடிவானது ஜெய் ஷா உட்பட முக்கிய பிசிசிஐ அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரியும் என்றும் பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த வகையில் வெளியான தகவலில் படி :

- Advertisement -

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி போட்டியுடன் வெளியேறியது. அதற்கடுத்து சீனியர் வீரர்களை நீக்கிவிட்டு ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட புதிய அணியை உருவாக்க பிசிசிஐ முடிவெடுத்தது. அதன்படியே அடுத்தடுத்த தொடர்களில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே விளையாடி வந்தது. அந்த நேரத்தில் சீனியர் வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்படாமல் இருந்தது.

ஆனாலும் இடையே பாண்டியா காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது. அதற்கு பதிலாக சூரியகுமார் யாதவை கேப்டனாக நியமித்து அவரின் தலைமையின் கீழ் அணி உருவாக்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருமே காயத்தை சந்திக்க மீண்டும் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டின் கேப்டனாக மாறினார். அந்த நேரத்தில் பி.சி.சி.ஐ அவரிடம் எதிர்வரும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டுதான் அணியை உருவாக்கி வருகிறோம்.

- Advertisement -

எனவே இளம் வீரர்களை உங்களது அணியில் தேர்வு செய்யுங்கள். விராட் கோலி போன்ற அனுபவ வீரர்கள் வேண்டாம் என்று கூறியிருந்ததாம். ஆனால் விராட் கோலி இந்த 2024-ஆம் ஆண்டு டி20 உலககோப்பையில் கடைசியாக ஆட விரும்பினாராம். இதனால் ரோகித் சர்மா அஜித் அகார்கர் மற்றும் பிசிசிஐ நிர்வாகத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளாராம்.

இதையும் படிங்க : ஓப்பனிங் செட் ஆகல.. நான் வேணா இப்படி பண்ணட்டுமா? ரோஹித் மற்றும் டிராவிட் கிட்ட பர்மிஷன் கேட்ட – விராட் கோலி

மேலும் தற்போதைய சிறந்த டி20 பேட்ஸ்மேன் விராட் கோலி தான். எனவே அவர் டி20 அணியில் இல்லை என்றால் நானும் அந்த அணியில் விளையாட மாட்டேன் என்று நேரடியாகவே பிசிசிஐ-யிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு அடுத்து இத்தனை ஆண்டு காலமாக இந்திய அணிக்காக சேவை செய்த அவர்கள் இருவரும் விரும்பும்படி இந்த வாய்ப்பை கடைசியாக பிசிசிஐ அளித்துள்ளது. அந்த கடைசி வாய்ப்பில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உலகக் கோப்பையை வென்று அதன் பின்னர் ஓய்வை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement