உலககோப்பையை வாங்க விசித்திரமான ஸ்டைலில் நடந்து வந்த ரோஹித்.. அதற்கு ஐடியா குடுத்தது – யார் தெரியுமா?

Rohit-Cup
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று பார்படாஸ் நகரில் நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்ததோடு இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.

கடைசியாக 2007-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த வேளையில் தற்போது 17 ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பின்னர் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த சாம்பியன் பட்டத்தை வென்று நீண்ட காத்திருப்புக்கு முடிவினை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த வெற்றி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து மைதானத்தில் வீரர்கள் வெற்றியை கொண்டாடிய வேளையில் பரிசளிப்பு விழா முடிந்து கோப்பை வழங்கும் விழா நடைபெற்றது.

அப்போது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமான பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய்ஷா மற்றும் ஐசிசியின் முக்கிய நிர்வாகி ஆகியோர் கோப்பையை ரோகித்துக்காக வழங்க காத்திருந்த வேளையில் அங்கு ரோஹித் சர்மா நடந்து வந்த ஸ்டைல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அதாவது பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி கோப்பையை வாங்கும் ஸ்டைலிலேயே ரோகித் சர்மாவும் வித்தியாசமாக நடந்து வந்து கோப்பையை வாங்கினார். இப்படி ரோகித் சர்மா கோப்பையை வாங்க என்ன காரணம்? என்று பார்க்கையில் : சகவீரரான குல்தீப் யாதவ் தான் பதக்கம் வாங்கும் போது ரோகித் சர்மாவிடம் மெஸ்ஸி ஸ்டைலில் வந்து கோப்பையை வாங்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க : 4.17 எக்கனாமி.. சுனில் நரேனின் 10 வருட சாதனையை உடைத்த பும்ரா.. வேறு பவுலர்கள் செய்யாத புதிய உலக சாதனை

அவரது அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அணித்தலைவர் ரோஹித் சர்மாவும் சரி என்று கூறி அதே ஸ்டைலில் நடந்து வந்து வித்தியாசமாக கோப்பை வாங்கியது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement