அந்த 2 பேரும் நெருப்பு மாதிரி.. கோலியிடம் அந்த பிரச்சனையில்ல.. ஃபைனலில் இதை செய்வோம்.. ரோஹித் பேட்டி

Rohit Sharma India
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவுடன் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற 2வது செமி ஃபைனலில் நடைபெற்ற இங்கிலாந்து 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. கயானா நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 56, சூரியகுமார் 47 ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த இங்கிலாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் தடுமாற்றமாக விளையாடி 16.4 ஓவரில் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹாரி புரூக் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

ஃபைனலுக்கு தயார்:
இந்நிலையில் அக்சர், குல்தீப் ஆகிய 2 ஸ்பின்னர்கள் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படுவதாக கேப்டன் ரோஹித் பாராட்டியுள்ளார். அத்துடன் ஃபைனலில் அசத்துவதற்காக விராட் கோலி அனைத்து ரன்களையும் சேமித்து வைத்துள்ளதாக ஆதரவு தெரிவிக்கும் அவர் இங்கிலாந்து வீழ்த்திய திட்டம் பற்றி பேசியது பின்வருமாறு.

“இந்த போட்டியின் வெற்றியால் மிகவும் திருப்தி. இதற்காக அணியாக நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம். இது அனைத்து வீரர்களின் முயற்சி. நாங்கள் சவாலான சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நன்றாக உட்படுத்திக் கொண்டோம். வீரர்கள் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடினால் அனைத்தும் அவர்கள் இடத்தில் விழும்”

- Advertisement -

“ஒரு கட்டத்தில் 140 – 150 ரன்கள் அடித்தால் போதும் என்று நினைத்தோம். ஆனால் சூர்யாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த பின் இன்னும் 25 ரன்கள் எடுக்கலாம் என்று நினைத்தோம். உண்மையான இலக்கை என்னுடைய மனதில் வைத்திருந்தேன். ஆனால் அதை யாருக்கும் சொல்லவில்லை. அவர்கள் அனைவரும் உள்ளுணர்வு கொண்ட வீரர்கள். இந்த மைதானத்தில் 170 ரன்கள் நல்ல ஸ்கோர் என்று நினைக்கிறேன்”

“அக்சர் – குல்தீப் ஆகியோர் துப்பாக்கியை போன்ற ஸ்பின்னர்கள். இங்கே ஷாட்டுகள் அடிப்பது மிகவும் கடினமானது. அவர்கள் மீதும் அழுத்தம் இருந்தது. இருப்பினும் அமைதியாக இருந்த அவர்கள் எங்கே வீச வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்கின்றனர். விராட் கோலி தரமான வீரர். எந்த வீரரும் இது போன்ற நேரத்தை கடந்து செல்வார்கள். அவரிடம் அதிரடியாக விளையாடும் எண்ணம் இருப்பதால் ஃபார்ம் பிரச்சனை இல்லை”

இதையும் படிங்க: இந்த பிட்ச்சில் அதை செஞ்சுருந்தா அடிச்சு நொறுக்கிறுப்பாங்க.. இங்கிலாந்தை வீழ்த்திய திட்டம் பற்றி அக்சர் படேல் 

“ஃபைனலுக்கு அவர் ரன்களை சேமித்து வைத்திருப்பதால் ஆதரவு தருவேன். அணியாக நாங்கள் அமைதியாக இருந்து ஃபைனலை புரிந்து கொள்ள விரும்புகிறோம். அமைதியாக இருப்பது நல்ல முடிவுகளை எடுக்க உதவும். வெற்றிக்கு நீங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அதையே நாங்கள் ஃபைனலில் செய்ய விரும்புகிறோம்” என்று கூறினார்.

Advertisement