கேன் வில்லியம்சனுக்கு அடுத்து இந்த சாதனையை செய்த 2 ஆவது கேப்டன் ரோஹித் சர்மா தானாம் – விவரம் இதோ

Kane-Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது சூப்பர் 8 சுற்றிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்று முடிந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியானது அடுத்ததாக ஜூன் 29-ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற இருக்கும் மாபெரும் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது பங்கேற்கும் மூன்றாவது ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது.

இதன் மூலம் அவர் கேன் வில்லியம்சனுக்கு அடுத்து இரண்டாவது கேப்டனாக ஒரு அறிய சாதனையையும் நிகழ்த்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 2021 மற்றும் 23 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியே விளையாடியது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியை தழுவி வெளியேறியது.

- Advertisement -

அதன் பின்னர் கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் இறுதி போட்டி வரை சென்று ஆஸ்திரேலியா அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது. தற்போது மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இப்படி ஒரே கேப்டனுக்கு கீழ ஒருநாள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 என அனைத்து வகையான ஐசிசி தொடரிலும் இந்திய அணி இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது.

இதையும் படிங்க : 23 ஃபோர்ஸ் 8 சிக்ஸ் 205 ரன்ஸ்.. லேடி சேவாக் என்பதை நிரூபித்த ஷபாலி வர்மா.. 26 வருட இரட்டை உலக சாதனை

இப்படி 3 வகையான ஐ.சி.சி தொடரிலும் இறுதிப்போட்டி வரை அணியை அழைத்து சென்ற இரண்டாவது கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா செய்துள்ளார். இவருக்கு முன்னதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இதேபோன்று மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தங்களது அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement