கேப்டனாக தல தோனியையே மிஞ்சிய ஹிட்மேன் ரோஹித் சர்மா.. 2 புதிய உலக சாதனையுடன் 2 வரலாற்று சாதனை

Rohit Sharma MS Dhoni
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வென்றுள்ளது. அத்தொடரில் ஆரம்பம் முதலே எதிரணிகளை வீழ்த்தி வந்த இந்தியா மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது.

மேலும் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக சந்தித்து வந்த தோல்விகளையும் இந்தியா உடைத்துள்ளது. அதே போல எம்எஸ் தோனிக்கு பின் டி20 உலகக் கோப்பையை வென்ற 2வது இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ஆனால் இந்த வெற்றியால் தோனியையே மிஞ்சி ரோஹித் சர்மா சில சாதனைகளை படைத்துள்ளார்.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
1. முதலாவதாக இந்த உலகக் கோப்பையில் அவருடைய தலைமையில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 8 தொடர்ச்சியான வெற்றிகளுடன் இந்தியா கோப்பையை வென்றுள்ளது. இதன் வாயிலாக தோல்வியே சந்திக்காமல் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற உலக சாதனையை ரோஹித் சர்மா படித்துள்ளார். இதற்கு முன் 2007இல் தோனி உட்பட மற்ற கேப்டன்கள் அனைவரும் குறைந்தது 1 தோல்வியை சந்தித்து தான் கோப்பையை வென்றனர்.

2. அத்துடன் ஃபைனல் வெற்றியும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக ரோஹித் சர்மா மொத்தம் 50 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 வெற்றிகளை பதிவு செய்த முதல் கேப்டன் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாபர் அசாம் (48) உள்ளார்.

- Advertisement -

3. ஐபிஎல் உட்பட இதுவரை டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா கேப்டனாக 8 ஃபைனல்களில் விளையாடியுள்ளார். ஆனால் அதில் அவர் ஒரு முறை கூட தோல்வியை சந்தித்ததே கிடையாது. இதற்கு முன் தோனி ஐபிஎல் (2013) முதல் டி20 உலகக் கோப்பை (2014) வரை கேப்டனாக ஃபைனல்களில் தோல்வியை சந்தித்துள்ளார்.

4. அத்துடன் டி20 உலகக் கோப்பையை 2 முறை (2007, 2024) வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன் 2007இல் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரோகித் சர்மா மட்டுமே தற்போதும் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார். மற்றவர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.

இதையும் படிங்க: ஒருபுறம் இந்திய வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட மறுபுறம் ரிஷப் பண்ட் செய்த செயல் – நெகிழவைத்த தருணம்

5. அதே போல பாகிஸ்தானின் வாசிம் அக்ரமுக்கு (1992) பின் மிகவும் அதிக வயதில் ஒரு ஐசிசி கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமைக்கும் ரோஹித் சர்மா சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

Advertisement