- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3க்கு 3.. நாங்களும் இதையே எதிர்பாத்தோம்.. இங்கிலாந்தின் சவாலை ஏற்ற ரோஹித் சர்மா .. வரலாற்றை மாற்றுமா இந்தியா?

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது செமி ஃபைனல் ஜூன் 27ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானா நகரில் துவங்கியது. அதில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றில் வெற்றி கண்ட இந்தியா மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் அணிகள் மோதின. இருப்பினும் அந்தப் போட்டி மழையால் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமானது.

ஒரு வழியாக மழை நின்றதைத் தொடர்ந்து இரவு 8.45 மணிக்கு போட்டி துவங்கப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. குறிப்பாக பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருப்பதாக தெரிவதாலும் மழை பெய்யும் சூழ்நிலை இருப்பதாலும் முதலில் பந்து வீசுவதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அறிவித்தார். அதனால் தங்களுக்கு சாதகம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

இந்தியா சாதிக்குமா:
ஆனால் மறுபுறம் டாஸ் அதிர்ஷ்டம் கிடைக்காத இந்தியா முதலில் பேட்டிங் செய்வதையே எதிர்பார்த்ததாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். குறிப்பாக பிட்ச் நேரம் செல்ல செல்ல ஸ்லோவாக மாறும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர் ஆரம்பத்திலேயே பெரிய ரன்கள் அடிக்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் ரோஹித் சர்மா அறிவித்தார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்களும் முதலில் பேட்டிங் செய்திருப்போம். வானிலை நன்றாக தெரிகிறது. இதுவரை எது நடந்ததோ அது நடந்து விட்டது. நாங்கள் ஆரம்பத்திலேயே அதிக ரன்கள் அடிக்க விரும்புகிறோம். போட்டி நடைபெற நடைபெற பிட்ச் ஸ்லோவாக மாறும். இது போன்ற தொடரில் விளையாடுவதன் சவாலை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்”

- Advertisement -

“இது நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதற்கான வாய்ப்பு. அதைத் தவிர்த்து நாங்கள் அதிகமாக சிந்திக்கவில்லை. நிகழ்காலத்தில் இருந்து எங்களுடைய ஆட்டத்தை செயலில் பேச வைக்க விரும்புகிறோம். எங்களுக்கு அதே அணி விளையாடுகிறது” என்று கூறினார். இதன் காரணமாக இந்தியா ஒரு வரலாற்றையும் மாற்ற வேண்டியுள்ளது.

இதையும் படிங்க: என்ன ரூல்ஸ் இதெல்லாம்? விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள இந்தியா இங்கிலாந்து அரையிறுதி போட்டி – அப்படி என்ன நடந்தது?

அதாவது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் செமி ஃபைனலில் சேசிங் செய்த போட்டியில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்ததே கிடையாது. 2010, 2016, 2022 ஆகிய வருடங்களில் விளையாடிய 3 போட்டிகளிலும் அந்த அணி 3 வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே இம்முறை சேசிங் செய்யப் போகும் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வரலாற்றை மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -