- Advertisement -

கனடா அணிக்கெதிரான போட்டியில் இருந்து நீக்கப்படவுள்ள சீனியர் வீரர் – ரோஹித் சர்மா எடுக்கவுள்ள முடிவு

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான அணியும், மூன்றாவது போட்டியில் அமெரிக்கா அணியும் வீழ்த்தி அசத்தியது.

அதனை தொடர்ந்து இன்று நடைபெற இருக்கும் முக்கியமான ஆட்டத்தில் கனடா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று அந்த முமென்டத்தை அப்படியே கொண்டு செல்ல விரும்பும்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது. அதன்படி அமெரிக்க மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனாலே ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது.

ஆனால் இந்த போட்டிக்கு பின்பு இந்திய அணி விளையாட இருக்கும் போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற இருப்பதினால் இந்திய அணியில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்க இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா திட்டமிட்டுள்ளாராம்.

- Advertisement -

அதன்படி தற்போது தனது பார்மில் தடுமாற்றத்தை சந்தித்து வரும் சீனியர் வீரரான முகமது சிராஜை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவை இந்த போட்டியில் சேர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பவுலிங் செய்யலனா துபே எதுக்கு? இந்திய பிளேயிங் லெவனில் அவரை கொண்டு வாங்க.. ஸ்ரீசாந்த் பேட்டி

மேலும் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் ஹார்டிக் பாண்டியா கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக அணியில் இருப்பதால் இந்த போட்டியிலேயே சிராஜ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -