ஆனந்த கண்ணீர் வடித்த ரோஹித் சர்மா.. தளபதியாக நின்று தட்டிக்கொடுத்த விராட் கோலி – நடந்தது என்ன?

Rohit-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியானது நேற்று கயானா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 57 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 47 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனை தொடர்ந்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே திணறியது.

- Advertisement -

இறுதியில் 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு சேர்த்து இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வீரர்களின் ஓய்வறையில் உள்ள ஒரு சேரில் அமர்ந்து கண்ணீர் விட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

தொடர்ச்சியாக ஐசிசி தொடர்களில் இறுதிவரை சென்று கோப்பையை தவறவிட்டு வரும் இந்திய அணி இம்முறை கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடி வரும் வேளையில் ஒரு வழியாக எந்த போட்டியிலும் தோற்காமல் இறுதி போட்டிக்கு வந்துள்ளதால் ரோஹித் சர்மா உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அதனை கண்ட விராத் கோலியும் அவர் தோளில் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறி உள்ளே சென்றார். இந்த விடயம் ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : எங்களின் நன்மைக்காக நீங்க இதை கண்டிப்பா செய்வீங்கன்னு நம்புறேன்.. இந்தியாவுக்கு வாசிம் அக்ரம் கோரிக்கை

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை முடிவில் இந்திய அணி தோற்றபோது மைதானத்தில் வீரர்கள் கண்ணீர் விட்ட நிலையில் தற்போது கேப்டன் ரோஹித் சர்மா தனது அணி இறுதிப் போட்டிக்கு சென்றதை நினைத்து ஆனந்த கண்ணீர் விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement