IND vs AUS : ஹிட்மேன் என்பதை நிரூபித்த ரோஹித் சர்மா – புதிய உலகசாதனை உட்பட படைத்த சாதனைகளின் பட்டியல்

ROhit Sharma Matthew Wade
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியது. அதனால் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரை கைப்பற்ற வென்றே தீர வெண்டும் என்ற கட்டாயத்தில் செப்டம்பர் 23ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா களமிறங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட ஈரப்பதமான மைதானம் காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு 8 ஓவர்களாக குறைக்கப்பட்டு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கேமரூன் கிரீன் 5 (4) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த சில ஓவர்களில் டிம் டேவிட் 2 (3) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மறுபுறம் அதிரடி காட்டிக்கொண்டிருந்த கேப்டன் ஆரோன் பின்ச் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (15) ரன்கள் எடுத்து பும்ராவிடம் ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசியில் கடந்த போட்டியைப் போலவே அபாரமாக பேட்டிங் செய்த மேத்யூ வேட் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 43* (20) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

ஹிட்மேன் ஷோ:
அதனால் 8 ஓவர்களில் ஆஸ்திரேலியா 90/5 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 91 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஒருபுறம் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி காட்ட மறுபுறம் கேஎல் ராகுல் 10 (6) ரன்களிலும் விராட் கோலி 11 (6) ரன்களிலும் ஆடம் ஜாம்பாவின் சுழலில் சிக்கினர். அப்போது வந்த சூர்யகுமார் யாதவும் அவரிடமே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க கடைசி நேரத்தில் பாண்டியாவும் 9 (9) ரன்களில் அவுட்டானார்.

அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் மறுபுறம் அதிரடி காட்டிய ரோஹித் சர்மா 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46* (20) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். கடைசியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சிக்சர் மற்றும் பவுண்டரியை அடித்து 10* (2) ரன்களுடன் பினிஷிங் கொடுத்தார். அதனால் 7.2 ஓவரிலேயே 92/4 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் வீழ்ந்து விட மாட்டோம் என்ற வகையில் ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

ஹிட்மேனின் சாதனைகள்:
இப்போட்டியில் ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் ஆரம்பம் முதலே நங்கூரமாகவும் அதிரடியாகவும் ரசிகர்களை மகிழ்வித்த கேப்டன் ரோகித் சர்மா வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த 10 வருடங்களாக தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஏராளமான ரன்களையும் வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்து ரசிகர்களால் ஹிட்மேன் என கொண்டாடப்படும் அவர் சமீப காலங்களில் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பேட்டிங்கில் அதிரடியான தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறுவதால் விமர்சனங்களை சந்தித்தார்.

ஆனாலும் நேற்றைய போட்டியில் அழுத்தத்தை சமாளித்து அற்புதமாக செயல்பட்ட அவர் மீண்டும் ஒருமுறை தன்னை ஹிட்மேன் என்று பேட்டால் நிரூபித்துள்ளார்.
1. முன்னதாக இப்போட்டியில் 4 மெகா சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய பேட்ஸ்மேன் என்ற மார்ட்டின் கப்தில் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரோகித் சர்மா : 176* (130 இன்னிங்ஸ்)
2. மார்ட்டின் கப்தில் : 172 (121 இன்னிங்ஸ்)
3. கிறிஸ் கெயில் : 124 (79 இன்னிங்ஸ்)

- Advertisement -

2. அத்துடன் 328 பவுண்டரிகளையும் அடித்துள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 500 (328 ஃபோர்ஸ் +176 சிக்சர்கள்=504*) பவுண்டரிகளை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். 2வது இடத்தில் மார்ட்டின் கப்தில் (478) உள்ளார்.

3. அத்துடன் இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்ற அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற 3வது இந்திய வீரர் என்ற சவுரவ் கங்குலி சாதனையை சமன் செய்தார். அந்தப் பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 76
2. விராட் கோலி : 58
3. ரோகித் சர்மா/சௌரவ் கங்குலி : தலா 37

4. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையும் பெற்றுள்ளார். எஞ்சிய இந்திய கேப்டன்கள் அனைவரும் சேர்ந்து 4 ஆட்டநாயகன் விருதுகளை (விராட் கோலி 3, சுரேஷ் ரெய்னா 1) மட்டுமே வென்றுள்ளனர்.

5. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு கேலண்டரில் அதிக ரசிகர்கள் அடித்த கேப்டன் என்ற உலக சாதனையும் படைத்தார். அந்த பட்டியல்: 1. ரோகித் சர்மா : 26* (2022) 2. ஆரோன் பின்ச் : 25 (2018) 3. விராட் கோலி : 23 (2019)

Advertisement