கடைசி பந்து வீசும் முன்னரே கண்கலங்கிய பாண்டியா.. போட்டி முடிந்ததும் ரோஹித் கொடுத்த பரிசு – நெகிழ்ந்த ரசிகர்கள்

Pandya
- Advertisement -

பார்படாஸ் நகரில் பரபரப்பாக நடைபெற்ற நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 176 ரன்கள் குவிக்க 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் இந்த இலக்கினை துரத்தி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது ஒரு கட்டத்தில் மிக எளிதாக வெற்றியை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருந்தது. குறிப்பாக கடைசி நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் 17-வது ஓவரை வீசிய ஹார்டிக் பாண்டியா அந்த ஓவரின் முதல் பந்தில் கிளாஸன் விக்கெட்டை வீழ்த்தியது இந்த போட்டிக்கு மிகப் பெரிய திருப்பமுடியை ஏற்படுத்தியது.

- Advertisement -

அதன் பிறகு கிட்டத்தட்ட 18 பந்துகளில் இந்திய அணி வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தது. இதனால் கடைசி ஓவரின் போது வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்கிற நிலை ஏற்பட்டது. பின்னர் இறுதி ஓவரை வீசிய ஹார்சிக் பாண்டியா முதல் பந்திலேயே டேவிட் மில்லரின் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணியின் வெற்றி அங்கேயே உறுதியானது.

அதனை தொடர்ந்து மீதமுள்ள ஐந்து பந்துகளையும் சிறப்பாக வீசிய பாண்டியா 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் கடைசி பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டபோது இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிட்ட வேளையில் பந்துவீசும் முன்னரே ஹார்டிக் பாண்டியா உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். பின்னர் இறுதிப்பந்தினை வீசிய பிறகும் மைதானத்திலேயே கதறி அழுதார். அதனை கண்ட வீரர்கள் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பையை ஜெயிச்சதோடு மட்டுமில்லாமல் மாபெரும் வரலாற்று சாதனையையும் நிகழ்த்திய – ரோஹித் சர்மா படை

மேலும் இந்த போட்டிக்கு பிறகு பேசிய ஹார்திக் பாண்டியா உணர்ச்சிவசப்பட்டு இந்த வெற்றி குறித்து பேசி கண் கலங்கியபடி இருந்தார். அதனை கவனித்த ரோஹித் அவருக்கு அருகில் சென்று அவரை கட்டியணைத்து முத்தமிட்டபடி அன்புப்பரிசை வழங்கி சென்றார். இப்படி ஹார்டிக் பாண்டியா கடைசி பந்திற்கு முன்னர் அழுததும் போட்டிக்கு பின்னர் ரோஹித் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறியதும் ரசிகர்களை நிகழ்வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement