சதம் அடித்த பிறகு மனைவியை நினைத்தீர்களா..! தினேஷ் கார்த்திக் கேள்வி..! ரோகித் ஷர்மா சுவாரஸ்ய பதில்..!

karthik
Advertisement

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரை இந்திய அணிய 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரின் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் ஹிட் மேன் ரோஹித் ஷர்மா அதிரடியாக சதமடித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்த நிலையில் இந்த தொடரின் மூன்றாவது போட்டி நேற்று (ஜுலை 8) இங்கிலாந்தில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடியில் 198 ரன்களை எடுத்தது.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 56 பந்துகளில் 100 ரன்களை எடுத்து அசத்தினார். இந்த போட்டி முடித்து ரோஹித் ஷர்மாவை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு ஜாலி பேட்டி ஒன்றை எடுத்தார்.

அப்போது உங்கள மனைவி இல்லாமல் நீங்கள் இம்முறை சதம் அடித்துள்ளீகள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த ரோஹித் “‘கண்டிப்பாக எனது மனைவி இந்த ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்திருப்பார். இன்னும் சில நாட்களில் அவர் இங்கு வருவார். நான் சதமடித்த போது அவர் இங்கு இல்லாமல் போனது சற்று வருத்தத்தை தருகிறது. ஆனால் பரவாயில்லை, இனிவரும் போட்டிகளில் அவர் இங்கு இருப்பார்” என்று தெரிவித்துளளார்.
rhohitsharma
இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி டி20 வரலாற்றில் 2000 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவரை தொடர்ந்து இதே தொடரில் இந்த பட்டியலில் இடம் பிடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் ஷர்மா என்பது குறிப்பித்தக்கது.

- Advertisement -
Advertisement