விராட் கோலிக்கு அடுத்து ரோஹித்தும் ஓய்வை அறிவித்து அதுகுறித்து கூறியது என்ன – எமோஷனல் வார்த்தைகள் இதோ

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று பார்படாஸ் நகரில் நடைபெற்று முடிந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றியை பெற்றதோடு சேர்த்து சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.

அதனைத்தொடர்ந்து 2007-ஆம் ஆண்டுக்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து பெற்ற இந்த வெற்றி இந்திய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட்டின் டி20 வடிவத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் விராட் கோலி அறிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை வருத்தம் அடையச் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது :

டி20 கிரிக்கெட்டில் இதுவே எனது கடைசி ஆட்டம். இதைவிட இந்த வடிவத்தில் இருந்து விடை பெற சிறந்த நேரம் இல்லை. டி20 கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதில் இருந்து இந்த பார்மேட்டை ரசித்து விளையாடி வருகிறேன். இந்த பயணத்தில் எல்லா தருணங்களையும் நான் ரசித்தேன். இந்த கோப்பையை மட்டும் வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது.

- Advertisement -

வார்த்தைகளால் இந்த வெற்றி குறித்து கூறுவது மிகவும் கடினம். ஆனால் இன்று நான் விரும்பியது நடந்துள்ளது. என் வாழ்க்கையில் இதற்காக மிகவும் ஆசைப்பட்டிருக்கிறேன். இம்முறை அந்த கோப்பையை கைப்பற்றியதில் மகிழ்ச்சி. இத்தனை வருடங்களாக நான் எடுத்த ரன்கள் எதுவும் பெரிதல்ல இந்தியாவிற்காக போட்டிகளையும், கோப்பைகளையும் வெல்வதே எனது விருப்பம் என்று அவர் எமோஷனலாக கூறி இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

இதையும் படிங்க : வெற்றிக்கு காரணம் அவங்க தான்.. 6 மாசம் எல்லாரும் கிண்டலடிச்சாங்க.. பாண்டியா கண்ணீர் மல்க பேட்டி

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக இதுவரை 159 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4231 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement