IND vs BAN : இப்படியா டீமை செலக்ட் பண்ணுவீங்க? ரோஹித் செய்த தவறை சுட்டிக்காட்டி – விமர்சிக்கும் ரசிகர்கள்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியானது டிசம்பர் நான்காம் தேதி இன்று டாக்கா மைதானத்தில் இந்திய நேரப்படி பகல் 11:30 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் சீனியர் வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி போன்றோர் அணிக்கு திருபியுள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

IND vs BAN Rohit Sharma Liton Das

- Advertisement -

இந்நிலையில் இந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் அறிமுக வீரராக குல்தீப் சென்னுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை தவிர்த்து விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார் என்றும் அக்சர் பட்டேல் முதல் ஒருநாள் போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்றும் ரோகித் சர்மா அறிவித்தார்.

அதன் பின்னர் டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் டாஸ் முடிந்து ரோகித் சர்மா எடுத்த ஒரு முடிவு மிகப்பெரிய தவறு என்று ரசிகர்கள் சுட்டிக்காட்டி அவரது அந்த முடிவை விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்களுடன் மட்டுமே களமிறங்கியுள்ளது.

Rohit and Dhawan

அதன்படி ரோகித், தவான், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் ஆகிய ஐந்து வீரர்கள் மட்டுமே பேட்ஸ்மேனாக களம் இறங்குகின்றனர். அவர்களை தவிர்த்து அணியில் தேவையில்லாமல் 4 ஆல்ரவுண்டர்களை சேர்த்துள்ளது தவறான ஒரு முடிவு என்று ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது, ஷர்துல் தாகூர், தீபக் சாகர் என நான்கு ஆல்ரவுண்டர்கள் இடம்பிடித்துள்ளனர்.

- Advertisement -

அவர்களை தவிர்த்து வேகப்பந்து வீச்சாளர்களாக குல்தீப் சென் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த போட்டியில் நிச்சயம் இந்திய அணிக்கு இன்னொரு பேட்ஸ்மேன் கூடுதலாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் வங்கதேச அணிக்கு எதிராக 5 பந்து வீச்சாளர்கள் போதுமானதாக இருக்கும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. அதன்படி இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs BAN : ரசிகர்கள் குரல் கேட்டதா? இந்திய ஒருநாள் அணியிலிருந்து ரிஷப் பண்ட் அதிரடி நீக்கம் – மாற்று வீரர் யார், காரணம் இதோ

1) ரோஹித் சர்மா, 2) ஷிகார் தவான், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) வாஷிங்க்டன் சுந்தர், 7) சபாஷ் அகமது, 8) ஷர்துல் தாகூர், 9) தீபக் சாகர், 10) முகமது சிராஜ், 11) குல்தீப் சென்.

Advertisement