- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சி.எஸ்.கே பார்முலாவை கையிலெடுத்த ரோஹித் சர்மா.. கப் நமக்கு தான் கவலைப்படாதீங்க – விவரம் இதோ

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு வெற்றிகரமான அணியாக இருந்து வருவதற்கு காரணம் தோனி அணித்தேர்வில் கடைபிடிக்கும் ஃபார்முலா தான். அந்த ஃபார்முலாவை தற்போது ரோகித் சர்மாவும் கையிலெடுத்து டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை மிக அற்புதமாக வழி நடத்தி தற்போது இறுதிப் போட்டி வரை கொண்டு வந்து கொண்டு வந்துள்ளார். எனவே நிச்சயம் கோப்பை நமக்குத் தான் என்பதையும் உறுதியாக நம்பலாம்.

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் சிஎஸ்கே அணி மூன்று முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் போனது. அதனை தவிர்த்து மற்ற அனைத்து தொடர்களிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : தோனி வீரர்களின் மீது வைக்கும் நம்பிக்கை மட்டும் தான். அவர் வீரர்களின் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் அவ்வளவு சீக்கிரம் யாரையும் வெளியேற்ற மாட்டார்.

- Advertisement -

தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுத்து ஃபார்ம் அவுட்டான வீரர்களை கூட நல்ல வீரராக மாற்றுவார். அதைத்தான் தொடர்ந்து செய்து வந்தார். அதன் காரணமாகவே சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணியாக மாறியது. இந்நிலையில் தற்போது இந்த டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவும் அதே பாணியை கையில் கொண்டு வந்து இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

அதாவது முகமது சிராஜ் ஒருவர் மட்டுமே இந்திய அணியிலிருந்து மாற்றப்பட்டு குல்தீப் யாதவ் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். அதுவும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளின் சூழலில் அடிப்படையில் தான் அந்த மாற்றத்தை செய்தார். அதனை தவிர்த்து இந்த டி20 தொடரில் எந்த மாற்றத்தையும் அவர் செய்யவில்லை.

- Advertisement -

குறிப்பாக விராட் கோலி துவக்க வீரராக தடுமாறி வருகிறார் என்பதனால் அவர் மூன்றாவது வீரராக களம் இறக்க வேண்டும் என்று பலரும் கூறினர். ஆனால் அவர் தொடர்ச்சியாக விராட் கோலியை துவக்க வீரராகவே களம் இறக்கி வருகிறார். அதேபோன்று மிடில் ஆர்டரில் ஷிவம் துபே சொதப்பி வருவதால் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டனர். அதையும் ரோஹித் சர்மா செய்யாமல் இருக்கிறார். அதேபோன்று ஜடேஜாவை வெளியேற்ற வேண்டும் என்று கருத்துக்களும் இருந்து வந்தது.

இதையும் படிங்க : நான் தான் சம்மதிக்க வெச்சேன்.. மும்பை கழற்றி விட்ட ரோஹித் என்ன செஞ்சுருக்காருன்னு பாருங்க.. கங்குலி வாழ்த்து

ஆனால் அதையும் செய்யாமல் வீரர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை அவர் நம்பிக்கையுடன் வழங்கி வருவதால் நிச்சயம் முக்கியமான போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்பதால் நிச்சயம் இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்பதே பலரது எதிர்பார்ப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது

- Advertisement -