IPL 2023 : ஜெயிச்சுட்டோம்னு மகிழ்ச்சி வேண்டாம், பவுலிங் ரொம்ப வீக்கா இருக்கு – முக்கிய அணியை எச்சரித்த ராபின் உத்தப்பா

Uthappa
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் முதல் 8 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. 5 கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் மும்பை கடந்த வருடம் ஆரம்பத்திலேயே 6 தொடர் தோல்விகளை சந்தித்து வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. அதிலிருந்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த வருடம் விளையாடி வரும் அந்த அணிக்கு பும்ரா இல்லாதது பந்து வீச்சு துறையில் பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது.

Tim David

- Advertisement -

குறிப்பாக வரலாற்றிலேயே முதல் முறையாக 214, 207, 212 என அடுத்தடுத்த 3 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கும் அளவுக்கு மும்பை பவுலர்கள் ரன் மெஷினாக திகழ்கின்றனர். அதிலும் குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஹெட்மயர் என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய மும்பை பவுலர்களை இளம் வீரர் ஜெய்ஸ்வால் மட்டும் தனி ஒருவனாக 20 ஓவர்கள் வரை நின்று அடித்து நொறுக்கி 124 (62) ரன்கள் விளாசி 212/7 ரன்கள் குவிக்க உதவினார்.

ரொம்ப வீக்கா இருக்கு:
இருப்பினும் அந்த போட்டியில் கேமரூன் கிரீன் 44, சூரியகுமார் யாதவ் 55, டிம் டேவிட் 45* என பேட்ஸ்மேன்களின் அதிரடியான ரன் குவிப்பால் வெற்றி கண்ட மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு போராடி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் கடைசி ஓவரில் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்ததால் வெற்றி கிடைத்தாலும் மும்பையின் பந்து வீச்சு மிகவும் மோசமாக இருப்பதாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார்.

Rohit Sharma MI Ishan Kishan

எனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற விரைவில் பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டும் என்று மும்பையை எச்சரிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கிடைத்த வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணியில் அனைத்தும் நன்றாக இருப்பதாக தோன்ற வைக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. அவர்கள் தங்களுடைய பந்து வீச்சில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்து டெத் ஓவர்களில் ஓரளவு சிறப்பாக செயல்படுவதற்கான வழியை கண்டறிய வேண்டும்”

- Advertisement -

“ஏனெனில் 15 ஓவர்கள் வரை அவர்கள் ஓரளவு சிறப்பாக செயல்படுகின்றனர். குறிப்பாக கடைசி 3 போட்டிகளில் 170 – 180 ரன்களை மட்டுமே கட்டுப்படுத்தும் அளவுக்கு நல்ல திட்டத்துடன் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் கடைசி 5 ஓவர்களில் கதையை இழந்து ரன்களை வாரி வழங்கினர். அதிலும் கொஞ்சமும் முன்னேறாமல் தொடர்ச்சியாக கடைசி 5 ஓவர்களில் அவர்கள் 60, 70, 80, 90 ரன்கள் வரை அள்ளிக் கொடுத்தனர். இது அவருடைய வெற்றியில் கொடூரமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்” என்று கூறினார்.

Robin-Uthappa

அவர் கூறுவது போல இந்த வருடம் மும்பை அணியில் பந்து வீச்சுத் துறையில் பியூஸ் சாவ்லா தவிர்த்து ஏனைய வீரர்கள் அனைவரும் ரன்களை அதிகமாக கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக ஒரு காலத்தில் டெத் ஓவர்களில் துல்லியமாக பந்து வீசும் அணியாக கருதப்பட்ட மும்பை தற்போது இந்த ஐபிஎல் தொடரில் அதிக எக்கனாமியில் பந்து வீசும் அணியாக செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:GT vs DC : இதுக்கு முழுசா நானே பொறுப்பு ஏத்துக்குறேன். தோல்விக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா பேசியது என்ன?

எனவே பும்ரா இல்லாத நிலையில் மும்பையின் வெற்றிக்கு ஜேசன் பேரன்ஃடாப், ஜோப்ரா ஆர்ச்சர், கேமரூன் கிரீன் போன்ற சர்வதேச அளவில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் கடைசி கட்ட ஓவர்களில் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இதைத்தொடர்ந்து மே 3ஆம் தேதி தன்னுடைய அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை மும்பை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement