- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றியது மட்டுமின்றி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய வீரரின் மனைவி – விவரம் இதோ

கொரோனா வைரஸ் கடந்த 7 மாதங்களாக உலகை உலுக்கி வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் வெளியில் மக்கள் நடமாடும் போது மருத்துவ பாதுகாப்பு விதிகளை பின்பற்றி,மாஸ்க் அணிந்து தங்களது இயல்பான வேலைகளை செய்யுமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் அரசுகளும் இதனையே தான் கூறி வருகிறது. கொரோனா வைரஸ் யாரையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரஸ் இங்கிலாந்து பிரதமர், பிரேசில் நாட்டின் பிரதமர் இந்தியாவில் பல சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் தாக்கியுள்ளது.

- Advertisement -

கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் இந்த வைரஸ் தொற்றி உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் மனைவி மாஸ்க் அணியாமல் சுற்றியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஜடேஜா தனது மனைவி ரிவாபா ஜடேஜா உடன் வெளியே வந்து இருந்தார்.


.
அப்போது காரில் சென்ற அவர்கள் இருவரில் ஜடேஜா மாஸ்க் அணிந்தபடி காரை ஓட்டியுள்ளார். ஆனால் அவரது மனைவி மாஸ்க் அணியவில்லை. இதன் காரணமாக அருகில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் ஜடேஜாவின் காரை மறித்து விசாரணை செய்தனர். அவரது மனைவி கவசம் அணிவது குறித்து கேட்டுள்ளனர்.

இதன் காரணமாக ஜடேஜாவின் மனைவி அந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த பிரச்சனையை மேலதிகாரிகள் வரை சென்றுள்ளது. ஏனெனில், ஜடேஜாவின் மனைவி குஜராத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இதன் காரணமாக இந்த பிரச்சனை தற்போது மேலிடம் வரை சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் இதுபோன்று ஜடேஜாவின் மனைவி பொது இடத்தில் சண்டை போடுவது புதிதல்ல. ஏற்கனவே தனது கணவரின் பிரபலத்தினால் செல்லும் இடமெல்லாம் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by